Published : 23 Jun 2017 08:43 AM
Last Updated : 23 Jun 2017 08:43 AM

பாஜகவை ஆதரிப்பதற்காக மிகப்பெரிய தண்டனை காத்திருக்கிறது: கே.ஆர்.ராமசாமி கருத்து

பாஜகவை ஆதரிப்பதற்காக அதிமுகவுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்டனை காத்திருக் கிறது என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சட்டம், சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் (அதிமுக):

ஒரு கட்சியின் செயல்பாடுகள் தவறாக இருந்தால் அதை தோழமைக் கட்சி கண்டிக்க வேண்டும். அதை விடுத்து திமுக வெள்ளைக் காகம் பறக்கிறது என்றால், காங்கிரஸாரும் ‘ஆமாம் வெள்ளைக் காகம் பறக்கிறது’ என்று கூறுகின்றனர்.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):

நீங்கள் இப்போது பிஜேபி என்ன கூறுகிறதோ அதற்கு ஆமாம் போடு கிறீர்கள். இப்போது நீங்கள் செய் துள்ளதற்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய தண்டனை காத்திருக்கிறது.

அமைச்சர் செல்லூர் ராஜு:

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பிரதமர் ஆதரவு கோரியதாலும் முதல்வர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல. நாங்கள் எங்கும் எஜமானன் கிடை யாது; அடிமையும் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x