Published : 29 Apr 2016 07:51 AM
Last Updated : 29 Apr 2016 07:51 AM

பயிற்சி மையங்களுக்கு மவுசு அதிகரிக்கும்

மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட தேசிய பொது நுழைவுத் தேர்வு மே 1-ம் தேதியும் 2-வது கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 24-ம் தேதியும் நடத்தப்படும் என்றும் ஆகஸ்ட் 17-ல் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை செப்டம் பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 1-ல் நடத்தப்படவுள்ள அகில இந்திய மருத்துவ, பல்மருத்துவ நுழைவுத்தேர்வு முதல்கட்ட தேசிய பொது நுழைவுத்தேர்வாக கருதப்படும். 2-வது கட்டமாக ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட இருக்கிற நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். நுழைவுத் தேர்வுக்கான காலஅவகாசம் மிகவும் குறைவாகவே இருக் கிறது. அகில இந்திய அளவிலான மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. ரூ.1 லட்சம் பயிற்சி கட்டணம் வசூலிக்கும் மையங்களும் உள்ளன. தற்போது பொது நுழைவுத்தேர்வுக்கு இருக்கும் குறைந்த காலஅவகாசத்தைப் பயன்படுத்தி விரைவு பயிற்சி (Fast track coaching)அளிக்க பல தனியார் பயிற்சிகள் அறிவிப்புகளை வெளியிடலாம். பிள்ளைகளின் மேற்படிப்புக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும் பெரும்பாலான பெற்றோர் தயாராகவே உள்ளனர். இத்தகைய சூழலில் தனியார் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x