Published : 30 Nov 2015 09:12 AM
Last Updated : 30 Nov 2015 09:12 AM

நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: தமிழக காங்கிரஸ் மகளிரணி தலைவர் விஜயதாரணி ஆவேசம்

தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என தமிழக காங்கிரஸ் மகளிரணி தலைவர் எஸ்.விஜயதாரணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த 19-ம் தேதி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகி றது. இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் கடந்த 27-ம் தேதி இளங்கோவனை நேரில் சந்தித்து விஜயதாரணி முறையிட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாகப் பேசிய இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய இளங்கோவன் மீது பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாந்தாநி அண்ணா சாலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து விஜயதாரணி தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஆலிஸ் மனோகரி புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இளங்கோவன் மீது புகார் அளிப்பதற்காக டெல்லி சென்றுள்ள விஜயதாரணி ‘தி இந்து’ செய்தியாளரிடம் தொலைபேசி மூலம் கூறியிருப்பதாவது:

டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய என்னை சொல்லத் தகாத வார்த்தைகளால் இளங்கோவன் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் மிக மோசமாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக நான் எந்த புகாரும் அளிக்கவில்லை. மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

இளங்கோவன் தூண்டுதலின் பேரில் என்னை கட்சியை விட்டு நீக்குமாறு மாவட்டத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒரு பெண் தலைவருக்கு இழைக்கப் பட்ட அநீதியை நினைத்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கி றேன். இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை இவ் வாறு பேசினால் ஏற்றுக்கொள் வார்களா என கேட்க விரும்புகிறேன்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கட்சி கட்டுப்பாட்டை மதித்து நடப்பவள். ஆனாலும் எனக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x