Last Updated : 14 May, 2015 10:42 AM

 

Published : 14 May 2015 10:42 AM
Last Updated : 14 May 2015 10:42 AM

நானும் தமிழ் பேசுவேன்.. என்னிடம் தமிழிலேயே பேசுங்கள்...- அசத்தும் அமெரிக்கா ஆராய்ச்சி மாணவி ஆண்ட்ரியா

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், ஒருவரை மற்றொருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஹாய், குட் மார்னிங், ஹவ் ஆர் யு என்ற நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருதும் தற்காலச் சூழலில் திருச்சியில் தங்கி தமிழ் மொழியில் ஆய்வு மேற்கொள்ளும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவி ஆண்ட்ரியா குட்டியர்ஸ், தமிழை தெள்ளத் தெளிவாக உச்சரிப்ப தோடு, பிறரிடம் பேசும்போதும் தமிழிலேயே உரையாடுகிறார்.

ஆண்ட்ரியா அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாண பல் கலைக்கழகத்தில் தெற்காசிய மக்களின் பண்பாடு மற்றும் உணவுப் பழக்க முறை குறித்த முனைவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த வகையில் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கம், பண்பாடு ஆகியவைக் குறித்து ஆய்வு செய்துவருவதுடன், தமிழகத்தில் உள்ள புராணங்களுடன் தொடர்புடைய கோயில்கள் குறித்தும் ஆய்வு செய்துவருகிறார்.

தற்போது திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வரலாற்றை ஆய்வுசெய்து வரும் ஆண்ட்ரியா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘எங்கள் நாட்டின் பல்கலைக் கழகத்தில் பல்வேறு இந்திய மொழிகள் குறித்த இளங்கலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு உள்ளது. குறிப்பாக உருதுக்கு அடுத்த படியாக பழம்பெரும் மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

எனக்கு தமிழ், ஸ்பானிஷ், சமஸ் கிருதம், பிரெஞ்ச், போர்த்துக்கீசிய மொழி உள்ளிட்ட மொழிகள் தெரிந்த போதிலும், தமிழில் நன் றாகப் படிக்கவும், எழுதவும் தெரி யும். தமிழ்நாட்டுக்கு வந்து சில நாளிதழ்களையும் படித்து வருகி றேன். தமிழகத்தில் சில ஊர்களுக் குச் சென்றபோது, அங்குள்ளவர் கள் என்னிடம் எப்படி பேசுவது எனத் தயங்கினர். அப்போது நான் தமிழிலேயே அவர்களிடம் உரையாடினேன். இந்த உரை யாடலின் வாயிலாக தமிழ்நாட்டில் அந்தந்த வட்டார மொழிகளை உச்சரிப்பதில் சற்று வித்தியாசம் இருப்பதை அறிந்துகொண்டேன்’’ என்றார் ஆண்ட்ரியா.

தமிழ் மொழியை தேர்ந்தெடுப்ப தற்கான காரணம் குறித்துக் கேட்ட போது ஆண்ட்ரியா கூறியதாவது:

‘‘தமிழ் மொழி பழமையானது என்பதுடன், தமிழர்களின் பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. மேலும், கோயில் வழிபாட்டு முறைகள் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது. கோயில்களுக்கு நிலம் தானம் வழங்கப்பட்டதன் நோக்கங் களும், கடவுளுக்கு உணவுகளைப் படையல் செய்வதன் பின்னால் புதைந்துள்ள உண்மைகளும் வியக்கவைக்கின் றன. தமிழின் சங்க இலக்கியங்கள் வாயிலாக அம்மொழியின் பாரம் பரியம், தொன்மை குறித்து அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் சங்க இலக்கியங்களை மொழி பெயர்ப்பு செய்து, வேற்று மொழிகளில் வெளியிட வேண் டும் என்பது எனது ஆசை. வேறு மொழிகளில் உள்ள இலக்கியங் களும், படைப்புகளும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள் ளன. அதே நேரத்தில் தமிழில் உள்ள அரிய படைப்புகளை வேறு மொழிகளில் வெளிவரச் செய்யாததால்தான் தமிழ் மொழி யின் அருமையை உலக அளவில் பலர் அறியாமல் உள்ளனர். பிற மொழிகளில் மொழிபெயர்க்க இங் குள்ள தமிழர்கள் முன்வரவேண்டும்.

தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கத்தை தலைசிறந்ததாகக் கருதுகிறேன். சத்துடன் கூடிய உணவையும், அந்த உணவிலேயே உடலுக்கு எதிர்ப்பு சக்தியுடன் கூடிய மருந்து வழங்கும் முறையும் தமிழர்கள் வழக்கத்தில் கொண்டிருந்துள்ளனர் என்பதை பண்டைய வரலாறுகள், கல் வெட்டுகள் மூலம் அறிந்துகொண் டுள்ளேன்.

எனவே, தமிழர்களின் உணவுப் பழக்கம் வழக்கம் குறித்து விளக்கியுள்ள இந்து பாக சாஸ்திரம் எனும் நூலை மொழி பெயர்ப்பு செய்யத் திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x