Published : 12 Feb 2016 11:59 AM
Last Updated : 12 Feb 2016 11:59 AM

நாட்றம்பள்ளி கல்லூரி வளாகத்தில் விழுந்தது எரிகல்தான்: இந்திய புவியியல் துணை இயக்குநர் திட்டவட்டம்

நாட்றம்பள்ளி தனியார் கல்லூரி யில் விழுந்தது எரிகல்தான் என்ப தற்கான மேலும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளதாக இந்திய புவியி யல் துறை மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் நேற்று தெரி வித்தார்.

வேலூர் மாவட்டம், நாட்றம் பள்ளி அடுத்த கே.பந்தாராப்பள்ளி பகுதியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் கடந்த 6-ம் தேதி மதியம் மர்ம பொருள் விழுந்தது. இதில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரி ழந்தார். கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள், வேலூர் மாவட்டம் காவனூர் விண்வெளி ஆராய்ச்சி மையம் விஞ்ஞானிகள், திருச்சி நேஷனல் கல்லூரி முதல்வர் அன்பரசு, வேலூர் தடயவியல் துறை உதவி இயக்குநர் பாரி உட் பட பலர் கல்லூரியில் விழுந்தது எரி கல்தானா என்பது குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கோளரங்க பாதுகாப்பு அதிகாரி லிண்ட்லி ஜான்சன், நாட்றம்பள்ளி தனியார் கல்லூரியில் விழுந்தது எரி கல் இல்லை என்றும், எரி கல் விழுந்து பூமியில் இதுவரை உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய புவியி யல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் ராஜிவ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், எரி கல் விழுந்ததாகக் கூறப்படும் இடம், கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரி மேல்தளம் ஆகிய இடங்களில் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கல்லூரி மேல்தளத்தில் சுமார் 60 கிராம் எடையுள்ள மற்றொரு கருப்பு நிறம் கொண்ட கல் கண் டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கல்லை பரிசோதனை செய்தபோது அது எரி கல் வகை யைச் சேர்ந்தது என ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இந்திய புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் ராஜிவ் கூறியதாவது:

பாரதிதாசன் கல்லூரியில் ஆய்வு செய்தபோது கடந்த 6-ம் தேதி விழுந்த மர்மபொருள் எரி கல்தான் என்பது 99 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர இன்று (நேற்று) கல்லூரி மேல் தளத்தில் இருந்து மற்றொரு கல் கிடைத்துள்ளது. அதுவும் எரி கல் வகையைச் சேர்ந்ததாகத் தெரி கிறது. தற்போது சேகரிக்கப்பட்ட மண், துகள், எரி கல் ஆகியவை கொல்கத்தா ஆராய்ச்சி மையத் துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x