Published : 25 Oct 2014 10:50 AM
Last Updated : 25 Oct 2014 10:50 AM

நவ.1-ம் தேதி பாஸ்போர்ட் மேளா: விரைவாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை - ஆன்-லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்

விரைவாக பாஸ்போர்ட் வழங்கு வதற்கு வசதியாக வரும் நவ.1-ம் தேதி, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாள் ஒன்றுக்கு 1,850 பேர் நேர்காணல் செய்யப்பட்டு வந்தனர். இது வரும் 30-ம் தேதி முதல் 2,080 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதன்படி, சாலிகிராமத்தில் நாள் ஒன்றுக்கு 1,300-ம், அமைந்த கரையில் 400-ம், தாம்பரத்தில் 380 நேர்காணல்களும் மேற்கொள் ளப்படும். மேலும், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் தேவை அதிகரித்து வருவதை ஒட்டி, அதை சமாளிக்க வரும் நவ.1-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது.

அன்றைய தினம் சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை யில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படும். இதன் மூலம் 1,700 விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

எனவே, விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பப் பதிவு எண்ணை பெற வேண்டும். மேளாவுக்கு வரும்போது இந்த பதிவு எண்ணை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும். சாதாரண முறையில் விண்ணப்பிப் பவர்கள் மட்டுமே இந்த மேளா வில் பங்கேற்க முடியும். தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர் களுக்கு மேளாவில் பங்கேற்க அனுமதி இல்லை.

மேலும், அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் தலைமை அலுவலகத்தில் உட்புற பரிசீலனை நாளாக அனுசரிக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பாஸ்போர்ட் தொடர்பான எவ்வித விசாரணைப் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x