Published : 28 Jun 2016 08:45 AM
Last Updated : 28 Jun 2016 08:45 AM

தென் மாவட்டங்களிலும் ரவுடிகள் கைது தீவிரம்: சென்னை தொடர் கொலையால் போலீஸார் நடவடிக்கை

சென்னையில் தொடரும் கொலைச் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸார் தீவிரமாக கைது செய்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில வாரங் களாக தொடர்ந்து முன்விரோதம், குடும்பத் தகராறு மற்றும் காதல் விவகாரங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையிலேயே பட்டப்பகலிலேயே ஐ.டி. நிறுவனத் தில் பணிபுரிந்த பெண் பொறியா ளர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவ தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இதுபோல், தமிழகம் முழு வதுமே சமீப காலமாக கொலை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சி யாக நடந்து வருகின்றன. இதை யடுத்து, தமிழகம் முழுவதும் போலீ ஸார் பொதுமக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

மதுரை நகரில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 10 ரவுடிகளை யும், நேற்று 15 ரவுடிகளையும் போலீஸார் கைது செய்தனர். மதுரை புறநகரில் நேற்று முன்தினம் 18 ரவுடிகளையும், நேற்று 10 ரவுடிகளையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள். தேனி மாவட்டத் தில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 13 ரவுடிகளை நேற்றுமுன்தினம் போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மற்ற ரவுடி கள் அண்டை மாநிலமான கேரளத் துக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காகவும் அவர்களைக் கைது செய்யவும் போடிமெட்டி, கம்பம்மெட்டு, லோயர் கேம்ப் ஆகிய சோதனைச் சாவடியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 12 ரவுடிகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 ரவுடிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 80 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 ரவுடிகளை போலஸார் கைது செய்தனர்.

சென்னையில்..

சென்னையில் கடந்த 4 நாட் களில் 491 ரவுடிகள் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் 4 மண் டலங்களில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் கடந்த 24, 25 ஆகிய இரு தினங்கள் மட்டும் 161 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கண்காணிப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதில், 26 மற்றும் 27 தேதி களில் மொத்தம் 330 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்பாவிகளை கைது செய்யும் போலீஸ்?

தொடர் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக ரவுடிகளை கைது செய்யச் சொல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் அதிகாரிகளிடம் திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக அப்பாவிகளையும் கைதுசெய்து சிறையில் அடைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு வழக்கில் சிறைக்கு சென்று தற்போது திருந்தி வாழும் பல நபர்களை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், அந்த நபர்களுடன் சுற்றிய நண்பர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் போலீஸார் கைது செய்கின்றனர். இதில் பலர் அப்பாவிகள்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளில் பலர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவோடு இரவாக போலீஸார் கைது செய்து அழைத்து வந்துவிடுகின்றனர். நிஜத்தில் செயல்பாட்டில் இருக்கும் குற்றவாளிகள் இப்போதும் வெளியே சுதந்திரமாக இருக்கின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் 608 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதனிடையே, சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தொடர்ந்து கடந்த 01.01.2016 முதல் 27.6.2016 வரை தொடர்ந்து சட்டம் ஒழுங்குக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள், திருட்டுக் குற்றம் தொடர்பான முக்கிய குற்றவாளிகள் என தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 608 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x