Published : 16 Apr 2014 07:23 PM
Last Updated : 16 Apr 2014 07:23 PM

திருவண்ணாமலை: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் மீட்பு

திருவண்ணாமலை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல், நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது.

கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் கிராமத்தில் ஜெயபாலன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஒன்றரை வயது சுஜித்தை நேற்று விழுந்தது.

அக்குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 30 தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தலைமையிலான மீட்புக் குழு வந்து, மீட்புக் கருவி (ரோபா) மூலமாக மீட்பு பணியில் ஈடுப்பட்டது. அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

அதிகாலை 3 மணி அளவில் குழந்தையின் நிலை தெரியவந்ததும் பிராண வாயு செலுத்துவது நிறுத்தப்பட்டது. குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, புதன்கிழமை காலை 10.15 - மாலை 4.25 மணி வரை 5 முறை வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அதன்மூலமாக 43 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, 25 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x