Published : 21 Aug 2014 09:36 AM
Last Updated : 21 Aug 2014 09:36 AM

திருமணமானதும் மனைவியை பிரிந்த இலங்கை அகதி: சார்பதிவாளர் அலுவலகத்தில் உருக்கம்

அகதி ஒருவருக்கு, இலங்கையைச் சேர்ந்த அவரது உறவினர் பெண் ணுடன் பதிவு திருமணம் புதன் கிழமை நடந்த சிலமணி நேரத்தில் மண மக்கள் பிரிந்து சென்றனர்.

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாலிங்கம் என்ற வேம்பன் (35). அகதியாக தமிழகம் வந்தவர், கடந்த 2011-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் வழக்கில் தமிழக போலீஸாரால் கைது செய் யப்பட்டார். செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இவர், இலங்கை வவுனியா மகரம்பகுளம் பகுதியில் வசிக்கும் தனது மாமன் மகள் வசந்தமலர் (33) என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

தற்போது, போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி இருப்பதால் திருமணம் செய்துகொள்வதில் கிருஷ்ணாலிங்கத்துக்கு சிக்கல் இருந்தது. இதற்கிடையில், வசந்த மலரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம் கிருஷ்ணாலிங்கம் மனு அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, செய்யாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெற் றோர் முன்னிலையில் கிருஷ்ணா லிங்கம்-வசந்தமலர் திருமணம் புதன்கிழமை நடந்தது. அதைத் தொடர்ந்து கிருஷ்ணாலிங்கம் போலீஸ் பாதுகாப்புடன் செய் யாறு சிறப்பு முகாமில் அடைக்கப் பட்டார். வசந்தமலரை சென்னை யில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x