Published : 19 Mar 2016 02:39 PM
Last Updated : 19 Mar 2016 02:39 PM

​திமுக கூட்டணியில் மமக தேர்தலை எதிர்கொள்ளும்: ஜவாஹிருல்லா

தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x