Published : 15 Mar 2016 09:07 AM
Last Updated : 15 Mar 2016 09:07 AM

திமுக - காங். கூட்டணிக்கு மேலும் 27 அமைப்புகள் ஆதரவு

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே) உள்ளிட்ட மேலும் 27 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்த இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆதரவு தெரிவித்த அமைப்புகள்: இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே), சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, காமராஜர் பசுமை பாரதம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், ஆதி ஆந்திரா நற்பணி மன்றம், தமிழ்மாநில திராவிட முன்னேற்ற கழகம், கர்நாடக மாநில தெலுங்கு தேசம் பார்ட்டி, உழைப்பாளர் மக்கள் கழகம், முக்குலத்தோர் மக்கள் கட்சி, திராவிட தேசம் கட்சி, வன்னியர் கிறிஸ்தவர் பேரவை, ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு பாரதிய ரிபப்ளிகன் பார்ட்டி, அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழ்நாடு யாதவர் சங்கம், பழங்குடியினர் வெற்றிச் சங்கம், சமாஜ்வாடி பார்ட்டி, தமிழ்நாடு, சமூக மக்கள் கட்சி, கிறிஸ்தவ மக்கள் கழகம், தமிழ்நாடு போயர் சேவா சமாஜம், எம்ஜிஆர் மக்கள் கட்சி, தமிழ்நாடு கன்னட சமுதாயம், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அனைத்து சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி. நேற்று முன்தினம் 19 அமைப்புகள் ஆதரவளித்த நிலையில் நேற்று மேலும் 27 அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x