Published : 25 Oct 2016 09:36 AM
Last Updated : 25 Oct 2016 09:36 AM

தரமான வியாபார உத்தியே வெற்றிக்கு காரணம்: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கருத்து

“நாம் என்ன தருகிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும்” என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.

பெரிய சுவையான பழங்களை சிறுவர்களுக்கு இலவசமாக கொடுத்து உண்ணச் செய்து அந்த விதைகளையே முன்னோர்கள் விதைத்தனர். இதனால் அளவில் பெரிய பழங்கள் கிடைத்தன. ஆனால், இப்போது பெரிய பழங் களை விற்றுவிட்டு சிறிய பழங் களின் விதைகளையே மீண்டும் விதைக்கின்றனர். இதனால் சிறிய சுவை குறைந்த பழங்களே விளைகின்றன. ‘நாம் என்ன தருகி றோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும்’.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் நமது பாரம்பரியமான வேட்டியை யும், வெண்ணிற உடைகளையும் தயாரித்து விற்பனை செய்ய முடிவெடுத்த போது பலரும் எதிர் மறையான கருத்துகளையே தெரி வித்தனர். ஆனால், தரமான புதிய முயற்சிகளை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நேர் மறையாக எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

பெண்களுக்கு விதவிதமான ரகங்களில் உடைகள் இருப்பதைப் போல ராம்ராஜ் காட்டன் ஷோரூமில் லிட்டில் ஸ்டார் வேட்டி, வெல்க்ரோ வேட்டி, பஞ்சகச்ச வேட்டி என பல்வேறு வகையான வேட்டி ரகங்கள் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அதேசமயத்தில் தனித் தன்மை கெடாமல் காலமாற்றத்தை வரவேற்பது அவசியம். வேட்டி கட்டுவதில் சிரமத்தை போக்க 'ஓட்டிக்கோ கட்டிக்கோ' என்ற வெல்க்ரோ வேட்டிகளையும், பாரம்பரியமான பஞ்சகச்ச வேட்டிகளையும், பாக்கெட் வைத்த வேட்டிகளையும் தந்ததை மக்கள் வரவேற்றார்கள்.

எங்கள் தயாரிப்புகளுடன் ‘வெண்மை எண்ணங்கள்' இதழை அன்புப் பரிசாக அளித்தோம். இப்போது எங்கள் ஷோரூம்களில் குடும்பத்துக்காக துணி வாங்கு பவர்கள் இந்த புத்தகத்துக்கு ஆண்டு சந்தாவும் கட்டுகின்ற னர்.

இத்தகைய தரமான வாடிக் கையாளர்களே ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் அஸ்திவாரம். எங்களின் நல்ல முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

இவ்வாறு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x