Published : 26 Apr 2017 07:59 AM
Last Updated : 26 Apr 2017 07:59 AM

தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது: 2.5 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. அரசு அலுவலகங் களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வராததால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின் ஒருபகுதியாக நாளையும் நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளி) 2 நாட்கள் மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது, அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணை யான ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றுவோ ருக்கு காலமுறை ஊதியம் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 25 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங் களின் போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு ஊழியர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அரசு அலுவலகங்களில் பெரும் பாலான ஊழியர்கள் வேலைக்கு வராததால் பணிகள் முடங்கின. எப்போதும் பரபரப்பாக காணப் படும் வருவாய்த்துறை அலுவல கங்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள், வணிகவரித் துறை அலுவலகங்கள், நகராட்சித் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னையில் வருவாய் நிர் வாக ஆணையர் அலுவலகம், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

இயக்குநர் அலுவலகம் உட்பட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சேப் பாக்கம் எழிலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகங் களுக்கு பெரும்பாலான ஊழியர் கள், அலுவலர்கள் வேலைக்கு வராததால் இருக்கைகள் காலி யாக கிடந்தன. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலக நுழைவுவாயில் கதவுக்கு பூட்டுப் போட்டுவிட்டு ஊழியர்கள் அனை வரும் வெளியேறினர். இதற் கிடையே, வேலைநிறுத்தப் போராட் டத்தின் ஒரு பகுதியாக எழிலக கட்டிடம் முன்பு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது.

அப்போது அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மாநில தலைவர் சுப்பிரமணியன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் படுத்தும்வரை 20 சதவீதம் இடைக் கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையில் பணியாற் றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் 64 அரசு துறைகளைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண் டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வா கத்துறை, வணிக வரித்துறை போன்ற முக்கிய துறைகளைச் சேர்ந் தவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக் கிறார்கள். இதனால், வறட்சி நிவாரணப்பணி, உள்ளாட்சிதேர்தல் பணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, குடிநீர் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிகவரி வருவாயிலும் பாதிப்பு ஏற்படும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத் தியநாதனிடம் நோட்டீஸ் கொடுத்த போது, ‘போராட்டத்தில் ஈடுபடுங் கள்’ என்று சொன்னார். அரசு ஊழி யர்களின் போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர வேண்டிய தலைமை பொறுப்பில் இருப்பவ ரின் செயல்பாடு, போராட்டத்தை தூண்டுவதாக இருந்தது. ஆர்ப்பாட் டம் நாளையும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதி (வியாழன், வெள்ளி) மாவட்டங்களில் மறியல் போராட் டம் நடைபெறும். ஒவ்வொரு மாவட் டத்திலும் 2 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். சென்னை யில் எழிலகத்தில் மறியல் போராட் டம் நடைபெறும். மறியல் போராட் டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக மே 2 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலவரை யற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர் களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்வரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் டேனியல், செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டனர்.

தலைமைச் செயலக சங்கம்

அரசு பணியாளர்கள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், அரசு ஊழியர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தம் என போராட்டங்களை அறிவித்து நடத்தி வந்த போதிலும், இப்போராட்டங்களில் தலைமைச் செயலக சங்கம் பங்கேற்கவில்லை. இதனால், வழக்கம் போல் நேற்று தலைமைச் செயலகத்துக்கு ஊழியர்கள் வந்து பணியாற்றினர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஓட்டல்கள், கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என, தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x