Published : 02 Sep 2015 08:47 AM
Last Updated : 02 Sep 2015 08:47 AM

தமிழகம் முழுவதும் ஏபிசி கேபிள் மின் வழித்தடம்: அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் படிப்படியாக நவீன ஏபிசி (Aerial Bunched Cable) கேபிள் மின்வழித் தடம் அமைக்கப்படும் என் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் (வில்லிவாக்கம்) எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘‘சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ஏபிசி (Aerial Bunched Cable) கேபிள்கள் மூலம் மின்வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளுடன் பல தொகுப்புகளாக மின் வயர்கள் செல்வதால் ஷாக் அடிப்பது தவிர்க்கப்படுகிறது.

இதை வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். வில்லிவாக்கம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நிதிநிலைக்கேற்ப படிப்படியாக ஏபிசி கேபிள்கள் மூலம் மின்வழித் தடங்கள் மாற்றி அமைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x