Published : 01 Dec 2015 09:27 AM
Last Updated : 01 Dec 2015 09:27 AM

தமிழகத்துக்கு அதிக நிவாரண நிதியைப் பெற முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு அதிக நிதியை பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவினர், தமிழக அரசு தெரிவித்த இடங்களுக்கு மட்டுமே சென்றுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் சென்ற இடங்களில் மாநில அரசு மீது மக்கள் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளனர். முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதி யில் நிவாரணப் பணிகள் நடைபெற வில்லை என்றும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் புகார் கூறு வதைத் தடுக்க தமிழக அரசு அதி காரிகளும், சென்னை மாநக ராட்சி அதிகாரிகளும் மத்திய குழு வினரை விரைவாக அழைத்துச் சென்றுவிட்டார்களாம். ஆங்காங்கு காத்திருந்த மக்கள் பிரதிநிதி களைக்கூட அவர்கள் சந்திக்க வில்லை. இதுகுறித்து செய்தியாளர் கள் கேட்டபோது, ‘தமிழக அரசு வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படியே தங்களின் பயணம் அமைந்தது’ என தெரி வித்துள்ளனர்.

காலதாமதம் செய்யாமல்..

எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் முதல்வரே டெல்லி சென்று மத்திய அரசிடம் பேச்சு நடத்தி அதிக நிதியை பெறவேண்டும். பாகுபாடு காட்டாமல் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் நிவாரண நிதி வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் நிவாரண நிதி பெறுவோரின் பட்டியலை தயா ரித்து வெளியிட வேண்டும். நிவாரண நிதி வழங்குவதை பொதுத்தேர்தலுக்கு முன்னோட்ட மாக கருதி ஆளுங்கட்சி செயல்படக் கூடாது.

மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்படு வதும் அவர்களை விடுவிக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுவதும் தொடர்கதையாக நீண்டு வருகிறது.

ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த 28-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 29 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் 4 நாள் பயணமாக இலங்கை சென்றிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அவருடன் தொடர்புகொண்டு மீனவர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழறிஞருக்கு இரங்கல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் தலைவராக 1989 முதல் 2010-ம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றிய தமிழறிஞர் நொபுரு கரஷிமா மறைவு செய்தியறிந்து வருந்தினேன். அண்ணா முதல்வ ராக இருந்தபோது நடைபெற்ற 2-வது உலகத் தமிழ் மாநாட்டில் 35 வயது இளைஞராக கலந்து கொண்டு அனைவரது கவனத் தையும் ஈர்த்தவர். சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ள அவரது மறைவு உலகத் தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் தலைவராக 1989 முதல் 2010-ம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றிய தமிழறிஞர் நொபுரு கரஷிமா மறைவு செய்தியறிந்து வருந்தினேன். அண்ணா முதல்வ ராக இருந்தபோது நடைபெற்ற 2-வது உலகத் தமிழ் மாநாட்டில் 35 வயது இளைஞராக கலந்து கொண்டு அனைவரது கவனத் தையும் ஈர்த்தவர். சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ள அவரது மறைவு உலகத் தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x