Last Updated : 04 Oct, 2015 11:48 AM

 

Published : 04 Oct 2015 11:48 AM
Last Updated : 04 Oct 2015 11:48 AM

தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை: ஜவாஹிருல்லா கருத்து

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-வது அணி வெற்றி பெறுவது சாத்தியமே அல்ல என்று மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இருந்து வெளியேறியுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம் யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து கடந்த ஜூலை 29-ம் தேதி மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற தனி அணியை உருவாக்கின. சில வாரங்களுக்குள் இந்த அணியி லிருந்து தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் வெளியேறியது. 5 கட்சி களுடன் மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்பட்டு வந்தது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. இந்த இயக்கம், தேர்தல் கூட்டணி யாக மாறும் என எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில், மக்கள் நலக் கூட் டியக்கத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியும் வெளியேறியுள் ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதற்காக மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட் டது. தேர்தல் கூட்டணி பற்றி எந்தக் கட்சியும் பேசவில்லை. இது தேர்தல் கூட்டணியாக மாறினால் நாங்கள் ஏற்க மாட்டோம் என ஆரம்பத்தி லேயே தெளிவாக கூறியிருந்தோம்.

ஆனால் வைகோ, இரா.முத் தரசன் போன்றவர்கள் மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என வெளிப்படையாக பேசி வருகின்றனர். எனவே, அதிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். திருவாரூரில் 5-ம் தேதி (நாளை) நடைபெறும் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்காது.

தமிழகத்தில் அதிமுக, திமுக வுக்கு மாற்றாக 3-வது அணி வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல் லாதது. 3-வது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளால் தமிழகத் தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களைக்கூட நியமிக்க முடியாது. இதை நான் குறையாகக் கூறவில்லை. யதார்த்த நிலை இதுதான்.

நாங்கள் முன்கூட்டியே முடி வெடுத்து அறிவித்து விட்டோம். மக்கள் நலக் கூட்டியக்கத்தில் உள்ள மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் மாற்று முடிவைத்தான் எடுக்கப் போகின்றன. நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டதாக பேசுகின்ற னர். கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘மக்கள் நலக் கூட்டியக்கத் தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்யு மாறு ஜவாஹிருல்லாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். தற்போதைக்கு வேறு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘மனிதநேய மக்கள் கட்சி வெளியேறியது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து வரும் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கூட்டத் தில் விவாதிப்போம். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் நலக் கூட்டியக்கத்தின் போராட்டங்கள் தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x