Published : 22 Aug 2014 08:04 AM
Last Updated : 22 Aug 2014 08:04 AM

தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரட்டியடிப்பு: கேரள வனத் துறையினர் அட்டூழியம்

முல்லை பெரியாறு அணையின் மழை அளவைக் குறிக்கச் சென்ற தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளை கேரள வனத் துறையினர் அவதூறாகப் பேசி விரட்டி அடித்தனர்.

கேரள வனத் துறைக்குச் சொந்தமான முல்லைக்கொடி, வனக்காவலை, தாண்டிக்குடி ஆகிய 3 இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டுள்ளது.

வாரந்தோறும் வியாழக் கிழமை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அங்கு சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு குறித்து வருவது வழக்கம்.

அதன்படி, வியாழக் கிழமை அணையின் செயற்பொறியாளர்கள் குமார், ஜெகதீஸ், தமிழக துணைக் குழுப் பிரதிநிதியும், உதவிச் செயற்பொறியாளருமான சவுந்தரம், தமிழ்செல்வன் ஆகியோர் படகு மூலம் முல்லைக்கொடிக்குச் சென்றனர். அங்கிருந்த கேரள வனத் துறையினரை அவர்களை படகிலிருந்து தரையில் இறங்க விடாமல் தடுத்து, அவதூறாகப் பேசினர்.

தமிழக அதிகாரிகள் முல்லைக்கொடிக்கு வந்து செல்ல கேரள தலைமைச் செயலர் கொடுத்த அனுமதி கடிதத்தை காட்டியும், அதை ஏற்க மறுத்து விரட்டி அனுப்பினர்.

இதையடுத்து, தமிழக அதிகாரிகள் படகில் தேக்கடிக்கு வந்து கொண்டிருந்தபோது தேக்கடி வனத் துறை ரேஞ்சர் சஞ்சீலன் தலைமையிலான வனத் துறையினர் மற்றொரு படகில் வந்து, தமிழக அதிகாரிகளின் படகை வழிமறித்து முல்லைக் கொடிக்கு மீண்டும் வந்தால் கைது செய்து விடுவதாக மிரட்டி அனுப்பினர்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி கள் தங்களது உயர்அதி காரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x