Published : 27 Nov 2014 10:48 AM
Last Updated : 27 Nov 2014 10:48 AM

டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நானும் களமிறங்குவேன்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிவிப்பு

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தானும் களம் இறங்குவதாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினார்.

சட்ட தினத்தை முன்னிட்டு ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வழக்கறிஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் காரைக்காலில் நேற்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சந்துரு பேசியதாவது: நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி ஆகியவற்றைப் பாழ்படுத்தி, மனித வாழ்வுக்கு இன்னல்கள் ஏற்பட மனிதர்களே காரணமாகின்றனர்.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மிக அதிக அளவு மணல் கொண்டு செல்லப்பட்டது. இதனால், நமது நிலம் பாழானது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

போபாலில் விஷ வாயு தாக்கி ஏராளமானோர் இறந்தனர். பலர் ஊனமுற்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. தற்போது, மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மீத்தேன் வாயுவை டெல்டா மாவட்டங்களில் எடுக்க முயல்வது ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதை தடுக்கும் முயற்சியில் நானும் களம் இறங்குவேன். மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பிரச்சினை கள் தொடர்பாக, வழக்கறிஞர்கள் தாங்களாக முன்வந்து வழக்குத் தொடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், வழக் கறிஞர் சங்கத் தலைவர் செல்வ முத்துக்குமரன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x