Published : 28 Nov 2014 11:25 AM
Last Updated : 28 Nov 2014 11:25 AM

டிசம்பர் 4-ல் கூட்டத் தொடர் ஆரம்பம்: சட்டப்பேரவையில் இருக்கைகள் பராமரிப்பு பணி தொடங்கியது

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, சட்டப் பேரவையில் இருக்கைகளை பராமரிக்கும் பணி நேற்று தொடங்கியது.

தமிழக சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற் கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, சட்டப் பேரவையை கூட்ட வேண்டும் என்று கோரிய திமுக தலைவர் கருணாநிதிக்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘பேரவைக்கே வராதவர், பேரவைக் கூட்டம் பற்றி பேசக் கூடாது’ என்று தெரிவித்தார். ‘அதிமுகவினர் அமைதி காப்பார்கள் என்று உறுதி தந்தால், சிறப்பு இருக்கை வசதி செய்து கொடுத்தால் பேரவைக்கு வரத் தயாராக இருக் கிறேன்’ என கருணாநிதி அறிவித் தார். இதையடுத்து, ‘திமுகவினர் போல அதிமுகவினர் அநாகரிக மாக நடந்துகொள்ள மாட்டார்கள். பேரவைக்கு வந்து கருணாநிதி ஜனநாயக கடமையாற்ற வேண்டும்’ என பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மக்கள் பிரச்சி னைகள் மற்றும் தொகுதிப் பிரச்சி னைகள் குறித்துப் பேச திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைக்கு வர திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது. பேரவையில் அவருக்கு சிறப்பு இருக்கை வசதி பெறுவது குறித்து திமுகவினர் ஆலோசித்து வருகின்றனர்.

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பேரவையில் இருக்கைகள் பராமரிப்புப் பணி நேற்று தொடங் கியது. பேரவைச் செயலக ஊழியர்கள் 20-க்கும் மேற்பட் டோர் இந்தப் பணியில் ஈடுபட் டுள்ளனர். இருக்கைகளை சுத்தப் படுத்துதல், மைக்குகள், விளக்கு களை சோதித்து பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண் டுள்ளனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்வாரா அல்லது அவருக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்த இருக்கை ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணா நிதிக்கு சிறப்பு இருக்கை வசதி ஏற்படுத்தப்படுமா என்ற எதிர் பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான கடித மும் அளிக்கவில்லை என்று பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வ ராகி விட்டதால், ஏற்கெனவே அவர் வகித்து வந்த அவை முன்னவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அவை முன்னவர்தான், சபையில் முதல்வருக்கு அடுத்தபடியாக ஆளுங்கட்சியின் முதன்மை பிரதிநிதியாக இருப்பார். அவையில் முதல்வர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களுக்கு பதில் அளிப்பார். அரசின் முக்கிய தீர்மானங்களை முன் மொழிவதுடன், ஒத்திவைப்புத் தீர் மானத்தையும் முன்மொழிவார்.

பொதுவாக முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ளவரே அவை முன்னவராக வருவது வழக்கம். அதன்படி, அமைச்சர் கள் நத்தம் விசுவநாதன் அல்லது வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவர் அவை முன்னவராகலாம் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x