Published : 30 Sep 2014 09:24 AM
Last Updated : 30 Sep 2014 09:24 AM

ஜெயலலிதாவுக்கு எப்போதும் எனது தார்மிக ஆதரவு உண்டு: காங். எம்.பி. கண்ணன் பேட்டி

ஜெயலலிதாவுக்கு எனது தார்மீக ஆதரவு உண்டு என்றும் அவசியம் ஏற்பட்டால் அவரை சந்திப்பேன் என்றும் புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கண்ணன் தெரிவித்தார். இது குறித்து புதுச்சேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாபமும், ஆதரவும் அதிகரித்துள்ளது. அவரது அரசியல் எதிரிகள் தற்போது மகிழ்ச்சி அடையலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு இது மனவேதனை யான நிகழ்ச்சியாகும். இது மிகப்பெரிய அனுதாப அலை யாக மாறி தமிழகம் மற்றும் புதுவையில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் பல நல்ல திட்டங் களை செயல்படுத்தி வந்த நிலையில் இதுபோன்ற துர திர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத் தில், பொதுமக்களுக்கு தொந் தரவு தரும் எந்தவொரு நடவடிக்கையிலும் அதிமுக தொண்டர்கள் இறங்க வேண் டாம். அப்படி செய்தால், அது அரசியல் எதிரிகளுக்குதான் லாபம். எனவே, அமைதியான நிலைமை உருவாக உதவ வேண்டும்.

மேல் முறையீட்டுக்கு பிறகு நீதித் துறை மூலம்தான் இறுதி முடிவை பெற முடியும். சிறை உள்ளே இருப்பவர்கள் தவறானவர்களல்ல. வெளியே இருப்போர் உத்தமரும் அல்ல. மக்கள்தான் இறுதி தீர்ப்பை தர முடியும். நான் அதிமுகவுக்கு செல்லவே ஜெயலலிதாவை ஆதரிப்பதாக நீங்கள் கூறலாம். நியாயத்தை நான் கூறுவேன். கட்சி மாறுகிற பழக்கம் எனக்கு கிடையாது. நான் கட்சி மாறி அல்ல. நான் கட்சி மாற இருப்பதாக பத்திரிகைகள் தான் கூறி வருகின்றன. எப்படி இருந்தாலும், ஜெயலலிதா வுக்கு எனது தார்மீக ஆதரவு உண்டு. அவசியம் ஏற்பட்டால் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன். இன்றும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். நான் இருக்கும் இடம்தான் காங்கிரஸ்.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அடிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல; அது கொள்ளை. அதுபோன்று உலகில் வேறெங்கும் நடந்திருக்க முடியாது. பாஜக அரசு, சிபிஐ மற்றும் அனைத்து துறைகளும் சரியாக நடவடிக்கை எடுத்தால் பல பேர் சிறைக்கு போவார்கள். 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஏமாற்றியுள்ளனர். அதில் புதுவையை சேர்ந்த ஒருவரும் இருந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பெயர் களை காலம் வரும்போது சொல்வேன். நான் எப்போதும் ஊழல்வாதிகளை ஆதரிக்க மாட்டேன். விரைவில் நான் மோடியை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கண்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x