Published : 23 May 2015 10:48 AM
Last Updated : 23 May 2015 10:48 AM

ஜெயலலிதா பதவியேற்பு விழா: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று 11 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட விழாவில் 5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

இந்தப் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட அவர், பதவியேற்பு விழா அரங்கின் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்.

அவர் அருகில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் அமர்ந்துள்ளார்.

ரஜினி தவிர, நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, அர்ஜுன் உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x