Last Updated : 22 May, 2015 04:20 PM

 

Published : 22 May 2015 04:20 PM
Last Updated : 22 May 2015 04:20 PM

ஜெ. வழக்கின் மேல்முறையீடு முடிவில் அவசரம் கூடாது: ஜெய்ராம் ரமேஷ்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல கோணங்களையும் அலசி ஆராய்ந்த பிறகே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறும்போது, "அவசரப்பட்டு மேல்முறையீடு செய்யக்கூடாது அதே போல் அவசரகதியில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவும் எட்டப்பட்டு விடக்கூடாது, கர்நாடக அரசு அனைத்து கோணங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிப்பது அவசியம்” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

கர்நாடக அரசு காலதாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து அவர் கூறும்போது, “கர்நாடக அரசுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, கணக்குரீதியாகப் பார்த்தால் 90 நாட்கள். ஆனால் 11 நாட்கள் முடிவில் கர்நாடக அரசு தாமதம் செய்கிறது என்று கூறுகிறீர்கள். இவ்வாறு கூறுவது நியாயமாகாது.

இது மிகவும் கருத்தூன்றி செயல்பட வேண்டிய விவகாரமாகும், தீர்ப்பை நன்றாக அலசி ஆராய வேண்டும். தீர்ப்பில் சீரற்ற தன்மையும், முரண்பாடுகளும், தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனவே, மேல்முறையீடு செய்வதாக இருந்தாலும், செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் அதற்குரிய வலுவான சட்ட ஆலோசனை மேற்கொள்வது அவசியம்” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x