Published : 26 Jun 2017 09:29 AM
Last Updated : 26 Jun 2017 09:29 AM

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

சரக்குகள் மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) விலைவாசி உயராது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.

சென்னையில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் வரவேற்றார். பாஜக தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை உரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜிஎஸ்டி குறித்த மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்காக டெல்லியில் இருந்து 3 உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். வரி அதிகமாக இருக்கிறது; வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருபவர்கள் அதற்கான காரணத்தையும் எடுத்துரைக்க வேண்டும். அவற்றுக்கு அதிகாரிகள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள். அதில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், உங்களது கோரிக்கை மனுவை டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு பொருளுக்கான வரிவிகிதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் நிர்ணயிக்கப்பட் டது. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் சட்டம் சார்ந்த ஓர் அமைப்பாகும். இந்த கவுன்சிலின் உறுப்பினராக தமிழக நிதியமைச்சர் உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் வரியைப் போட்டு திணிக்கிறார் என்று யாரும் எண்ணக்கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொண்டு ஒப்புதல் கொடுத்த பிறகே வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

ஜிஎஸ்டி விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது.

ஜிஎஸ்டியில், புதிய வரி விதிக்கவில்லை. இருக்கின்ற வரியும் குறைந்திருக்கிறதே தவிர, அதிகமாக இல்லை. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வியாபாரம் செய்வோருக்கு வரி கிடையாது. இதுவரை கணக்குகளை நோட்டுகளில் எழுதி அதைக்கொண்டு வரி செலுத்தியவர்கள், இனிமேல் கணினியில் கணக்குகளைப் பதிவு செய்து, அதன்மூலமே வரி செலுத்தி, அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம். வணிக வரி அலுவலர் உங்களைத் தொந்தரவு செய்து பணம் எடுத்துச் செல்லும் நிலைமை மாறிவிடும். லஞ்சம் எங்கும் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுகிறது.

வரி கட்டக் கூடியவர்கள் வரி கட்டுங்கள். வரி செலுத்த முடியாத வர்கள் மீது வரி விதிக்கப்பட வில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு விலைவாசி நிச்சயமாக உய ராது. எனவே, நாட்டின் முன்னேற் றத்தைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்த அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக வணிகர்கள், பொது மக்களின் கேள்விகள், சந்தேகங் களுக்கு ஜிஎஸ்டி தலைமை ஆணையர் சி.பி.ராவ், ஜெ.எம்.கென்னடி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x