Published : 23 Jan 2017 06:52 PM
Last Updated : 23 Jan 2017 06:52 PM

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் விளக்கத்தை ஏற்று மெரினாவில் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்

தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம் அளித்ததையடுத்து மெரி னாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் நேற்று கலைந்து சென்றனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 7 நாட் களாக மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதை தொடர்ந்து, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதுகுறித்து, தங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் கலைந்து செல்வோம் என போராட் டக்காரர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து, சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் மெரினாவில் கூடியிருந்த போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்களிடம் சட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது, “சரித் திரத்திலேயே இவ்வளவு வேகமாக அவரச சட்டத்தை பிறப்பிக்க வைத் தது மாணவர்கள்தான். எனவே, மாணவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதை கருதுகிறேன். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித் துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக வழிவகை செய்ய காரணமாக இருந்துள்ளது மாணவர்களின் போராட்டம்” என்றார். பின்னர், சட்ட நிபுணர்களின் விளக்கத்தை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் இரவு 7 மணியளவில் மெரினாவில் இருந்து கலைந்து சென்றனர். இதன்மூலம், கடந்த 7 நாட்களாக மெரினாவில் நீடித்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் உருக்கம்

மெரினா கடற்கரையில் போராட் டக்காரர்கள் மத்தியில் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று பேசிய தாவது:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கைக்காக மாண வர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு உணவு எடுத்து வந்து கொடுத்தேன். மற்ற வர்களும் பெருமளவு உதவினர். நாளுக்கு நாள் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்டதைப் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அதற்கு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆனால், மாணவர்கள் நிரந்தர சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆளுநர் அனுமதி அளித்து கையெழுத்திட்ட நகல் வேண்டும் என்று மாணவர்கள் கேட்கின்றனர். ஆனால், போராட்டக் களத்துக்கு வந்துள்ள மற்றவர்கள் வேறு எதை எதையோ கேட்கிறார்கள். மாணவர்கள் கையில் இருக்கும் வரை போராட்டம் அமைதியாக இருந்தது என்றார் ராகவா லாரன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x