Published : 09 Feb 2016 10:40 AM
Last Updated : 09 Feb 2016 10:40 AM

செல்லப் பிராணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கால்நடை மருத்துவமனைகளில் தனி அறுவை சிகிச்சைப் பிரிவு

தமிழகத்தில் ஆடு, மாடுகளின் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதேபோல செல்லப் பிராணிகள் எண்ணிக்கையும் அதிக ரித்து வருவதால், அனைத்து கால் நடை மருத்துவமனைகளிலும் செல் லப் பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை கட்டிடம் கட்டப்பட்டு வரு கிறது. விரைவில், இந்த சிகிச் சைப் பிரிவுகளை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப் புத் துறை திட்டமிட்டுள்ளது.

நாக ரிக வளர்ச்சியால் நகரங்கள், கிராமங்களில் தற்போது உயர் வருவாய்ப்பிரிவு மக்கள் முதல் கிராம மக்கள் வரை, அனைவரும், தற்போது குடும்பத்தில் ஒருவரைப் போல உயர்ரக நாய்கள், பூனை, புறா, கிளி உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்க்கத் தொடங்கிவிட்டனர். அதனால், 10 ஆண்டுகளில் ஆடு, மாடுகள், கோழி களுக்கு இணையாக தமிழகத்தில் செல்லப் பிராணிகளின் எண் ணிக்கை உயர்ந்துவிட்டது. ஆனால், மாவட்டத் தலைநகரங்களில் செயல் படும் பன்முக சேவை கால்நடை மருத்துவ மையங்களில் மட்டுமே செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது.

மாவட்டத்தின் மற்ற மருத்துவ மனைகள், (மருந்தகங்கள்), கிளை நிலையங்களில் செல்லப் பிராணி களுக்கு தனியாக சிகிச்சை மையங்கள் இல்லை. ஆடு, மாடு களுடன் சேர்த்துதான், கால்நடை மருத்துவர்கள் செல்லப் பிராணி களுக்கு மேலோட்டமான சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக, செல் லப் பிராணிகளுக்கு கழிச்சல்நோய், தோல் நோய்கள், வயிற்றுக் கோளாறு மற்றும் எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆண் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, பெண் நாய்களுக்கு கர்ப்பப் பை அகற்றுதல், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கும், பிராணிகளின் தோற்றத்தில் குறைபாடு ஏற்பட்டாலோ, மாவட்டத் தலைநகர பன்முக சேவை கால்நடை மருத்துவமனைகளுக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.

நோய் பரவும் அபாயம்

பன்முக மருத்துவமனை தவிர, செல்லப் பிராணிகளுக்கு பரவும் நோய்களைக் கண்டுபிடிக்க ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து நுட்பமான சிகிச்சை அளிக்கும் முறையும் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் செல்லப் பிராணிகள் சிகிச்சைக்கு அதிகளவு பணம் செலவிட வேண்டிய நிலை இருப்பதால், ஒரு கட்டத்தில் மக்கள் செல்லப் பிராணிகளை பராமரிக்க முடியா மல் தெருக்கள், சாலைகளில் விட்டுவிடுகின்றனர். அந்த செல்லப் பிராணிகள் மூலம் மற்ற விலங் குகள், மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்க, தற்போது தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தாலுகா, வட்டார அளவில் புதிதாக கட்டப்படும் கால்நடை மருத்துவமனைகளில் (மருந்தகங்கள்) செல்லப் பிராணி கள் அறுவை சிகிச்சைப் பிரிவும் சேர்த்து கட்டப்படுகிறது.

பன்முக மருத்துவமனைகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சைக் கூடம், சுத்திகரிக்கும் அறை, மருந்துக் கிடங்கு, ஆய்வுக் கூடமும், இந்த சிகிச்சைப் பிரிவில் கட்டப்படுகிறது. செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய விரைவில் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரி சோதனை வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கால்நடை பரா மரிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் செல்லப் பிராணிகளுக்கு குறிப்பிட்ட நோய் வந்தால், அதன் ரத்தத்தை எடுத்து பன்முக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்புவோம். அந்த நோய் மற்ற பிராணிகளுக்கு பரவி தீவிரமடைந்தால், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் நேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, என்ன நோய் எனக் கண்டறிந்து பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பார்.

செல்லப் பிராணிகளுக்கான அனைத்து சிகிச்சை முறைகளை யும் கிராமங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் செயல்படுத்தவே, தற்போது இந்த செல்லப் பிராணிகள் சிகிச்சை மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x