Published : 27 May 2015 10:44 AM
Last Updated : 27 May 2015 10:44 AM

சென்னையில் பெண்களால் இயக்கப்படும் அஞ்சலகம்: திங்கள் முதல் சேவை தொடங்கியது

முழுவதும் பெண்களால் இயக்கப்படும் அஞ்சலகம் சென்னையை அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) தொடங்கியது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னையை அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறு வனங்கள் இயங்கி வருகின்றன. கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான அஞ்சல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை மேம்படுத்த அந்த நிறுவனங்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதின் பேரில் மகேந்திரா வேர்ல்டு சிட்டி அஞ்சலகத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக 603004 என்னும் புதிய அஞ்சல் குறியீட்டு எண் அந்த அஞ்சலகத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மகேந்திரா சிட்டி அஞ்சலகத்துக்கு பெண்கள் மட்டுமேநியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மண்டலத்தில் முழுவதும் பெண்களை மட்டும் கொண்டு செயல்படும் முதல் அஞ்சலகம் இதுதான் என்பது குறிப் பிடத்தக்கது. 4 பெண்களை கொண்ட அஞ்சலகப் பணிகள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கின. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்னை எத்திராஜ் சாலையில் பெண்களை மட்டுமே கொண்ட அஞ்சலகம் செயல்பட்டுவருகிறது. ஆனால் அங்கு கடித விநியோக சேவைகள் கிடையாது, அது தவிர, மற்றைய பொது அலுவல் பணிகள் (counter works) மட்டுமே நடைபெற்று வருகின்றன.

சென்னை மண்டலத்தில் முழுவதும் பெண்களை மட்டும் கொண்டு செயல்படும் முதல் அஞ்சலகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x