Published : 28 Nov 2014 12:24 PM
Last Updated : 28 Nov 2014 12:24 PM

ஐ.டி. நிறுவன ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிறுசேரி ஐ.டி. நிறுவன ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 3 பேருக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23). சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. சடலத்தை மீட்ட கேளம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணை தீவிரமாக நடந்துவந்த நிலையில், கல்பாக்கம் அருகே ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை கொலையாளிகள் பயன்படுத்தியது தெரியவந்தது. கார்டின் பின்பகுதியில் குறியீட்டு எண் எழுதப்பட்டிருந்ததால் கிரெடிட் கார்டை கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.

மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள்

இதை உடனடியாக கண்டுபிடித்த சிபிசிஐடி போலீஸார் கல்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உத்தம் (23), ராம் மண்டல் (23) ஆகிய இருவரையும் பிடித்தனர். விசாரணையில் இவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த கொலையாளிகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேற்குவங்கத்தில் இருந்த உஜ்ஜல் மண்டல் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சதி திட்டம் தீட்டுதல், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு ஆகிய 5 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணை செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆயுள்தண்டனை, தலா ரூ.15 ஆயிரம் அபராதம்

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சதி திட்டம் தீட்டுதல், கொள்ளை, கொலை, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மூவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

உடல் அழுகியதால்..

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, திருட்டு, சதி திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதில், பலாத்கார குற்றம் தவிர மற்ற குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், பலாத்காரம் செய்யப்பட்டதற்கான போதிய ஆதாரம் மருத்துவ பரிசோதனையில் கிடைக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார குற்றம் நிரூபிக்கப்பட முடியாமல் போனது. முன்கூட்டியே உடல் மீட்கப்பட்டிருந்தால், பலாத்கார குற்றத்தை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டி ருக்கும். கூடுதல் தண்டனை கிடைத் திருக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், பலாத்கார குற்றம் தவிர மற்ற குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், பலாத்காரம் செய்யப்பட்டதற்கான போதிய ஆதாரம் மருத்துவ பரிசோதனையில் கிடைக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார குற்றம் நிரூபிக்கப்பட முடியாமல் போனது. முன்கூட்டியே உடல் மீட்கப்பட்டிருந்தால், பலாத்கார குற்றத்தை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டி ருக்கும். கூடுதல் தண்டனை கிடைத் திருக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x