Published : 23 Jun 2017 07:57 AM
Last Updated : 23 Jun 2017 07:57 AM

சுவாதி கொலை நடந்து ஓராண்டு நிறைவு: ரயில் நிலையங்களில் சிசிடிவி எப்போது?

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப் பட்டார். இதை தொடர்ந்து, ரயில் நிலையங்களை அதிகாரி கள் ஆய்வு செய்தனர். சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 43 ரயில் நிலையங்களில் 2016 டிசம்பர் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தனர்.

கொலை நடந்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனா லும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்கூட இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படவில்லை. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் உட்பட 7 ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன.

இதுபற்றி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்துக்கு வரும்போதெல்லாம், சுவாதி கொலை சம்பவம்தான் ஞாபகம் வருகிறது. ஒருசில மின்சார ரயில்களில் மாலை, இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இங்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் பணி முடியவில்லை. அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’’ என்றனர்.

புறநகர் மின்சார ரயில்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவரும் ரயில்வே போலீஸார், ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘சென்ட்ரல், எழும்பூர் தொடங்கி செங்கல்பட்டு, மயிலம் வரை சென்னை ரயில்வே போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடு கின்றனர். 700 போலீஸார் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 400 பேர் மட்டுமே உள்ளனர். 300 காலிப் பணியிடங்களையும் நிரப்பினால்தான் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்’’ என்றனர்.

இதுதொடர்பாக கேட்டபோது, ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக் கள் பொருத்த இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் மின்சார ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும். முதல்கட்டமாக நுங்கம்பாக் கம் ரயில் நிலையத்தில் அடுத்த சில நாட்களில் பொருத்தப்படும். ரயில் நிலையங்களில் சுற்றுச் சுவர் அமைக்குமாறு வலியுறுத்தி யுள்ளோம். காலிப் பணியிடங் களை நிரப்புமாறு தமிழக காவல்துறையிடம் வலியுறுத்தியுள் ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x