Published : 01 Dec 2015 09:29 AM
Last Updated : 01 Dec 2015 09:29 AM

சாலை வழி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை துறைமுகம்-பெங்களூர் கன்டெய்னர் ரயில் சேவை: சென்னை துறைமுக தலைவர் தகவல்

சாலை வழி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகை யில், சென்னை துறைமுகம்-பெங்களூர் இடையே கன் டெய்னர் ரயில் சேவை இம் மாதம் தொடங்கப்பட உள்ளது என சென்னை துறைமுக தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாஸ்கராச்சார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை துறை முகத்தின் 5-வது நுழைவு வாயிலில் உள்ள சாலையில் 4 வழி சாலையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதே போல், 7-வது நுழைவு வாயி லில் உள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

எண்ணூர்-மணலி சாலை (எம்ரிப்) விரிவாக்கப் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. செரியன் நகரில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டு அங்கு தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. என்.டி.ஒ. குப்பம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களுக்குள் இச்சாலை விரிவாக்கப் பணி நிறைவடையும்.

சாலைகளில் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் துறை முகத்தில் இருந்து எண்ணூ ருக்கு கப்பல் மூலம் கன்டெய் னர் கொண்டு செல்லும் திட்டம் இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச் சேவையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருக்கு கன்டெய்னர் ரயில் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை டிசம்பர் மாதம் 2-வது வாரத்துக்குள் தொடங்கப்படும். வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் சேவை மூலம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் கன்டெய்னர்கள் கொண்டு செல்லப்படும். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

15 சதவீதம் சலுகை

மதுரவாயல்-துறைமுகம் இடையேயான உயர்மட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது. இது தொடர்பாக எழுந் துள்ள பிரச்சினைகள் குறித்து மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப் படும். கப்பல்களில் அனுப்பப் படும் கன்டெய்னர் சரக்குக் கட்டணத்தில் 15 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாஸ்கராச்சார் கூறினார்.

இச்சந்திப்பின் போது சென்னை துறைமுக துணைத் தலைவர் சிரில் ஜி.ஜார்ஜ் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x