Published : 24 Aug 2016 09:13 AM
Last Updated : 24 Aug 2016 09:13 AM

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு: திமுக புறக்கணிப்பு

திமுக உறுப்பினர்கள் மீதான இடை நீக்கம் ரத்து செய்யப்படா ததைக் கண்டித்து சட்டப்பேரவை யில் இருந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் அக்கட்சி உறுப் பினர்களும், முஸ்லிம் லீக் உறுப்பினர் முகம்மது அபுபக்கரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:

சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி 79 திமுக உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மறுபரிசீலனை செய்து அவர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 18, 19 தேதிகளில் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதனை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை.

பேரவைத் தலைவர் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்களின் சுதந்திர மும் அதிமுக அரசால் பறிக்கப்பட் டுள்ளது. சட்டப்பேரவை வளாகத் தில் நுழைய பத்திரிகையாளர் களுக்கு கெடுபிடி விதிக்கப்பட் டுள்ளது. சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது செய்தியாளர் கள் சட்டப்பேரவையில் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தப்பட்டுள் ளனர். இது கடும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், ‘‘திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படாததைக் கண்டித்தும், பத்திரிகையாளர்கள் மீதான கெடுபிடியை கண்டித்தும் பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தேன். அதிமுக அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

திமுக புறக்கணிப்பு

இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் 10 பேரும் நேற்று பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘திமுக உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, அதுவரை பேரவை நிகழ்வுகளில் இடைநீக்கம் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள். இப்பிரச்சினை தொடர்பாக தேவைப்பட்டால் ஆளுநரை சந்தித்து முறையிடு வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x