Published : 19 Feb 2017 10:01 AM
Last Updated : 19 Feb 2017 10:01 AM

‘சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டேன்’: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

‘சட்டப்பேரவை காவலர்களால் தாக் கப்பட்டேன்’ என்று கூறி கிழிந்த சட்டையுடன் பேரவையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், சாலையில் நின்று மக்களிடம் முறை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். பேரவைத் தலைவரின் உத்தர வின்பேரில் திமுக எம்எல்ஏக் களை அவைக் காவலர்கள் குண்டு க்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழிந்த சட்டையுடன் பேரவை வளா கத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர் களிடம் கூறியதாவது:

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பிய திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலை வரை முற்றுகையிட்டு கோஷமிட் டனர். இதனால் மதியம் வரை பேர வையை ஒத்திவைத்தார். பின்னர், எங்களை பேரவைத் தலைவர் அவ ரது அறைக்கு அழைத்து பேசினார். அப்போது, வேண்டுமென்றே சட்டையை கிழித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடித்தார். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறினேன். அத்துடன், மறைமுகமாக வாக்குச்சீட்டு அடிப் படையில் வாக்கெடுப்பை நடத் தும்படி கேட்டுக் கொண்டேன்.

அதன் பின்னர் அவைக்கு வந்த பேரவைத் தலைவர், தனது நிலை யில் இருந்து மாறாமல் ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார். இதனால் நாங்கள் உள்ளேயே அமர்ந்து அறப்போராட் டத்தில் ஈடுபட்டோம். அதனால் பலவந்தமாக எங்களையெல்லாம் அடித்து துன்புறுத்தி வலுக்கட் டாயமாக வெளியேற்றினர். கூடுதல் ஆணையர் சேஷசாயி உத்தரவின் அடிப்படையில் எங்களை குண்டுக் கட்டாக தூக்கி, அடித்து உதைத்து வெளியேற்றினார்கள். ஏற்கனவே உள்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது வெளிக்காய மும் ஏற்பட்டுள்ளது. நடந்த சம் பவத்தை விளக்கமாக எழுதி, பேரவையை ஒத்திவைக்கும்படி பேரவை தலைவரிடம் கொடுத்து விட்டு வந்துள்ளோம். இன்றைய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து ஆளுநரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் தனது காரில் ஏறி புறப்பட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென ராஜாஜி சாலையில் காரை நிறுத்தி, அதிலிருந்து இறங்கிய ஸ்டாலின், அங்கே கூடியிருந்த பொதுமக்களை பார்த்து தனது கிழிந்த சட்டையை காண்பித்து, ‘‘சட்டப்பேரவையில் எனக்கு நடந்த அநீதியை பாருங்கள்’’ என்று முறையிட்டார். பின்னர் காரில் ஏறி நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x