Published : 28 Sep 2016 12:13 PM
Last Updated : 28 Sep 2016 12:13 PM

கோவை சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், "சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வரும் மாவட்ட கண்காணிப்பாளர் வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் வசம் உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்குக்கான விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு ஏடிஜிபி கேட்டுக் கொள்ளப்படுகிறார். இத்தகவல் நகல் மேற்கு மண்டல் ஐ.ஜி.,க்கும் அனுப்பப்பட்டுள்ளது"

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிக்குமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர். கடந்த 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் உள்ள இந்துத்வா நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் அவர் வீட்டிற்கு சுமார் அரை கி.மீ. தொலைவுள்ள நிலையில் சரமாரியாக வெட்டினர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டடதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவையில் கலவரம் வெடித்தது. தற்போது அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x