Published : 28 Sep 2016 09:11 AM
Last Updated : 28 Sep 2016 09:11 AM

கொலையான சசிக்குமாருடன் செல்போனில் பேசியவர்கள் யார்? - போலீஸார் தீவிர விசாரணை

கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகரின் செல்போனை தொடர்புகொண்டு பேசிய பெண்கள் யார்? அவர் களுக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் மர்ம நபர்களால் அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இறுதி ஊர்வலத் தின்போது வன்முறைச் சம்பவங் கள் நடந்தன.

தற்போது கோவையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொலை வழக்கில், குற்றவாளி களை கைது செய்ய ஏற் கெனவே ஏற்படுத்தப்பட்ட 6 தனிப் படைகள் 8 தனிப்படைகளாக அதி கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் இயங்குகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கொலை யான சசிக்குமாரின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தபோது, சில பெண்களிடம் சசிக்குமார் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எதற்காக அவரை தொடர்பு கொண்டனர்? அவர்கள் பேசியதற்கும், இக்கொலைச் சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

இக்கொலை தொடர்பாக வேறு விதமான கருத்துகளும் பரப்பப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின் றனர். ஆகவே இதுகுறித்து நட வடிக்கை எடுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிக்குமாரின் அஸ்தியை இன்று (புதன்கிழமை) அவரது உறவினர் கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆற்றில் கரைப்பதாக முடிவு செய் யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அங்கு டிஐஜி தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

ஊர்வலத்துக்குத் தடை

இந்நிலையில் அங்கு அஸ்தி கரைக்கவும், ஊர்வலமாகச் செல்ல வும் போலீஸார் அனுமதி வழங்க வில்லை. அதைத் தொடர்ந்து கோவை சாடிவயல் அருகே அஸ்தியை கரைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், ஊர்வல மாகச் செல்ல அனுமதி இல்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x