Published : 25 Oct 2016 09:18 AM
Last Updated : 25 Oct 2016 09:18 AM

கேரளத்தில் இருந்து கோவையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: 24 லாரிகள் பறிமுதல்; கதிர்வீச்சு அச்சத்தில் பொதுமக்கள்

கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 40 லோடு மருத் துவக் கழிவுகள் கோவை எட்டிமடை யில் சட்டவிரோதமாக குவித்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள் ளது. தமிழக சோதனைச் சாவடி களைக் கடந்து கேரளத்தில் இருந்து கழிவுகள் எடுத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ள தால், கேரள மாநில கழிவுகள் கொட் டப்படும் பகுதியாக மாறிவருகிறது.

கோவையின் எல்லையோர கிராமமான எட்டிமடையில் கேரள மருத்துவக் கழிவுகளைக் குவிப்ப தற்கு ஒரு பிரம்மாண்ட கிடங்கையே சிலர் நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்ப கவுண்டர்(75). இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ்(50) வாடகைக்கு இடம் பிடித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக, இரவு நேரங்களில் கேரளத்தில் இருந்து மூட்டை மூட்டையாக லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அங் குள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட் டுள்ளது. நேற்று அதிகாலை, ஒரே சமயத்தில் 24 லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அங்கு வந்துள்ளன. இதையறிந்த மக்கள் லாரிகளில் என்ன பொருட்கள் உள்ளன என்பதை அறிய அங்கு திரண்டனர். விசாரணையில், கேரளத்தில் இருந்து டன் கணக்கிலான பிளாஸ் டிக் கழிவுகளையும், கதிர்வீச்சு அபாயம் மிக்க மருத்துவக் கழிவு களையும் கொண்டுவந்து குவிக் கும் வேலை நடப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. கிணத்துக்கடவு எம்எல்ஏ சண்முகம், வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து கேரளத்தில் இருந்து கழிவுகளைக் கொண்டு வந்த லாரிகளை போலீஸார் பறி முதல் செய்தனர். அங்கு ஏற் கெனவே கொண்டு வந்து குவிக்கப் பட்டுள்ள கழிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந் நிறுவன உரிமையாளர் முகமது இலியாஸிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

எட்டிமடை கிராமவாசிகள் கூறும் போது, ‘தமிழக - கேரள எல்லையில் இருக்கும் வாளையாறு தமிழக காவல்துறை சோதனைச்சாவடி, எட்டிமடையில் இருக்கும் ஆர்டிஒ சோதனைச்சாவடி, வணிகவரித் துறை சோதனைச் சாவடி என 3 சோதனைச்சாவடிகளைத் தாண்டி வந்து கழிவுகளை கொட்டுகிறார் கள். தமிழக சோதனைச்சாவடிகளே, இந்த நாசகர வேலைக்கு உடந்தையாக இருக்கிறது. கோவை குப்பை கிடங்காக மாறுவது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இந்த லாரிகளைகூட மக்கள்தான் பிடித்துள்ளோம்’ என்றனர்.

ரசீதுகளே இல்லை

வட்டாட்சியர் சிவசங்கரன் கூறும் போது, ‘எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடக்கிறது. அதிக ளவில் மருத்துவக் கழிவுகள் இருப்பதால் துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்படும். லாரி ஓட்டுநர்களிடம் சோதனைச்சாவடி களில் நின்று வந்ததற்கான ரசீது கள் இல்லை.

எனவே சோதனைச் சாவடிகளிலும் விசாரிக்க வேண்டி யுள்ளது. இக்கழிவுகளால், நீர் ஆதாரங்கள், விவசாயம், மக்கள் வாழ்வாதாரம் அனைத்துமே பாதிக் கப்படும். எனவே மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

என்ன இருக்கு? யாருக்கும் தெரியாது

கோழிக்கோட்டில் இருந்து இக்கழிவுகள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இருந்து எட்டிமடைக்கு லாரி வாடகை ரூ.4 ஆயிரம். ஆனால் இதுபோன்ற சரக்குகளை கொண்டுவர ஒரு லோடுக்கு ரூ.8 ஆயிரம் வரை வாடகை கொடுக்கப்படுகிறது. அதேபோல என்ன பொருள் உள்ளே இருக்கிறது என்பதும் கூறப்படுவதில்லை. இதனால் தமிழக லாரிகளும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல சரக்குகளை ஏற்றி, இறக்க பிஹார் மாநில இளைஞர்கள் சுமார் 20 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

பணம் கொடுத்தால் போதும்

9 மாதமாக கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் 3 சோதனைச்சாவடிகளிலும் எப்படி இது தெரியாமல் போனது என்ற கேள்வி மக்களிடையே வலுவாக எதிரொலிக்கிறது.

லாரி ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, ‘தமிழக வணிகவரித்துறை சோதனைச்சாவடியில் ஒரு லாரிக்கு ரூ.200 கொடுப்போம்; விட்டுவிடுவார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி சென்றால், அங்குள்ள சோதனைச்சாவடியில் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x