Published : 21 Dec 2014 10:28 AM
Last Updated : 21 Dec 2014 10:28 AM

கிரானைட் முறைகேடு விவகாரத்தில் சகாயம் நடத்தி வரும் விசாரணையை உளவுத்துறை கண்காணிப்பு: மேலிடத்துக்கு உடனுக்குடன் அறிக்கை

கிரானைட் முறைகேடு குறித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாக கவனித்து மேலிடத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நடந் துள்ள கிரானைட் முறைகேடு குறித்து 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. கிரானைட் குவாரிகள், புராதன சின்னங்களை 2 நாட்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சகாயம் விசாரணை அதிகாரியாக நியமிப்பதிலேயே பரபரப்பு தொடங்கியது.

கிரானைட் முறை கேடு குறித்து ஏற்கெனவே விசா ரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சகாயத்தை நியமிக்க வேண்டியதில்லை என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. விசாரணையை மதுரையில் மட்டுமா அல்லது மாநிலம் முழுவதிலும் நடத்துவதா என்ற குழப்பமும் நீடித்தது. சகாயம் நீதிமன்றத்தை நேரடியாக அணுகி விளக்கம் பெற்றார்.

மதுரையில் முதற்கட்ட விசா ரணைக்கு வந்தபோது ரயிலில் அவசரப்பிரிவில் இருக்கை ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை என்றும், மதுரையில் அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் விசாரணையை கண்காணிப்ப தாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட் டுகள் எழுந்தன.

உச்சகட்டமாக, விசாரணையை தொடர்ந்தால் சகாயத்தை கொலை செய்துவிடு வோம் என மிரட்டல் கடிதம் வந்தது. இருப்பினும் அவரிடம் பிஆர்பி ஏஜெண்டுகள் தங்களையே மிரட்டி நிலத்தை வாங்கிவிட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

எந்த நேரத்திலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என்பதால் சகாயம் விசாரணை நடத்திய அலுவலகம் முன் எந்த நேரமும் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர்.

சகாயம் மதுரையில் இறங்கு வது முதல் திரும்பிச் செல்வது வரை அவரின் நடவடிக்கைகளை உளவுத்துறை யினர் முழுமையா கக் கண்காணித்தனர். புகார் விவரம், அதை அளிப்பவர்களின் பின்னணி, சகாயத்தை சந்திப்பவர் கள், விசாரணைக்கு வந்து செல்லும் அதிகாரிகள், விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள், அரசியல் கட்சியினர் சந்திப்பு உள்பட அனைத்து விவரங்களையும் உளவுத்துறையினர் சேகரிக்கின்றனர். இதற்காக 2 முதல் 4 உளவுப்பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டனர்.

குவாரிக்கு சகாயம் நேரடி ஆய்வு செய்ய சென்ற இடங்களில் எல்லாம் உளவுத்துறையினர் கண்காணித்தனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை உடனுக் குடன் மேலிட அதிகாரிகளுக்கு தெரிவித்தபடி இருந்தனர்.இத்துடன் வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் என பல்வேறு துறை அலுவலர்களும் சகாயம் விசா ரணை குறித்த தகவல்களை தங்கள் உயரதிகாரிகளுக்கு புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வரு கின்றனர். அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் மூலம் துறையின் தலைமையிடத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.

இது குறித்து உளவுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘சகாயத்திடம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு இயக்கத்தினர், காவல்துறையினர் மனு அளித்துள்ளனர். இவர்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவைப்படுகிறது. மேலும் விசாரணையில் பரபரப்பு தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதால் தகவல்களை சேகரிக்கிறோம். வேறு காரணம் ஏதும் இல்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x