Published : 23 Jan 2017 10:35 AM
Last Updated : 23 Jan 2017 10:35 AM

காளைகள் இருக்கும் பகுதி கேமராவால் கண்காணிக்கப்பட வேண்டும்: ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் - விதிகளை வெளியிட்டது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும், ஆய்வு செய்த பின்னர், மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் காளைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் முழுமையாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் கான தடையை நீக்கும் வகை யில் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விதிமுறைகளை நேற்று முன்தினம் தமிழக கால் நடைத் துறை வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

# தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு விதிகளின் கீழ், ஒரு தனிநபரோ, அமைப்போ அல்லது குழுவோ ஜல்லிக்கட்டு நடத்த விரும்பினால், மாவட்ட ஆட்சியருக்கு எழுதி அவருக்கு தெரிவிக்க வேண்டும்.

# ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், பங்கேற்பாளர்கள் (மாடுபிடி வீரர்கள்) தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியருக்குப் போட்டி நடத்துநர்கள் தெரிவிக்க வேண்டும்.

# ஜல்லிக்கட்டுக்கு அனுமதிய ளிக்கும் முன், நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வருவாய், கால்நடை பராமரிப்பு, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் அடங்கிய ஜல்லிக்கட்டு குழுவை ஆட்சியர் அமைக்க வேண்டும்.

# கால்நடை பராமரிப்புத்துறை யினரிடம் முறையான அனுமதி பெற்ற காளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காளைகளுக்குப் பரிசோதனை

# ஜல்லிக்கட்டு போட்டி திறந்த வெளியில் நடத்தப்படும்போது சில குறிப்பிட்ட விதிகளைப் பின் பற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன்படி, வாடி வாசல் பகுதிக்கு அனுப்பப்படும் முன் குறைந்தபட்சம் 20 நிமிடங் களாவது காளைகள் ஓய்வெடுக்க நேரம் அளிக்க வேண்டும்.

# காளைகள் கட்டி வைக்கப்படும் இடங்களில் அவற்றின் சாதாரண நடவடிக்கைகளுக்கான இடமாக 60 சதுரஅடி ஒதுக்கப்பட வேண்டும். காளைகளின் உரிமையாளர்கள் எப்போதும் அப்பகுதியில் இருந்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

# காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் முன், உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

# காளைகளுக்கு தேவையான நிழல், காற்று வசதி, சுத்தமான தரை ஆகியவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காளைகள் இருக்கும் பகுதி முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

# காளைகள் முழுமையாக கால் நடை பராமரிப்புத் துறையினரால் ஆய்வு செய்யப்படுவதுடன், அவற்றை அவிழ்த்து விடும்போது மூக்கணாங்கயிறு கழற்றப்பட வேண்டும்.

திறந்த வெளியில் ஏற்பாடுகள்

# காளைகள் வாடிவாசலில் இருந்து வெளிவந்ததும், அவை விளையாட போதிய இடம் வேண்டும். அதன்படி, 50 சதுர மீட்டர் பகுதி இதற்காக ஒதுக்கப்பட வேண்டும். இந்த பகுதியில்தான் காளைகள் பங்கேற்பாளர்களால் அடக்கப்பட வேண்டும்.

# வாடிவாசல் முன் பங்கேற் பாளர்கள் நின்று, அவை வெளியில் வருவதை தடுக்கக்கூடாது.

# பங்கேற்பாளர்கள் காளை களின் திமில் (மேடு) பகுதியை பிடித்துக் கொண்டே 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் செல்ல லாம். அல்லது 3 முறை மாடுகள் துள்ளும்போது அவற்றை தழுவி யிருந்தால் மட்டுமே போதும். யாரும் காளைகளின் கால், வால், கொம்பை பிடித்து அவற்றின் இயக் கத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது. வாடிவாசல் பகுதியில் இருந்து 15 மீட்டர் தூரத்துக்கு தேங்காய் நார் பரப்பி வைக்கப்பட வேண்டும்.

# காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்ட இடத்தின் இறுதி முதல் அவற்றை உரிமையாளர்கள் பிடிக்கும் இடம்வரை அவற்றின் ஓட்டப்பகுதியாக அனுமதிக்கப் பட்டுள்ளது. காளைகளின் ஓட்டப் பகுதியின் இருபுறமும் தடுப்பு அமைப்புகள் இருக்க வேண்டும். அதன்பின் தான் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதி இருக்க வேண்டும்.

# பங்கேற்பாளர்கள், ஒதுக்கப் பட்ட 15 மீட்டருக்கு அப்பால் காளைகளைத் தொடக்கூடாது. காளைகள் அவிழ்த்து விடுதல், பிடித்தல், உரிமையாளர்கள் பிடித்தல் என அனைத்தும் 2 நிமிடங்களுக்குள் முடிவதை உறுதி செய்ய வேண்டும்.

# காளைகள் அவிழ்த்துவிட்டு, பிடிக்கப்பட்டநிலையில், அவற் றுக்கு 20 நிமிடம் ஓய்வு அளித்த பின் உரிமையாளர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். காளை கள் உரிமையாளர்களால் சேகரிக் கப்படும் இடத்தில் கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் கட்டாயம் இருக்க வேண்டும்.

# பார்வையாளர்களுக்கான மாடம் பொதுப்பணித்துறையினர் குறிப்பிட்ட அளவில் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.

# காளைகளை இடமாற்றம் செய்வதற்கான அவசர கால வழி கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல், பங்கேற்பாளர்களும் அவசர காலங்களில் வெளியில் செல்ல போதுமான இடம் அளிக்கப்பட வேண்டும்.

# ஜல்லிக்கட்டு நிகழ்வு முழு வதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x