Published : 05 Mar 2015 10:35 AM
Last Updated : 05 Mar 2015 10:35 AM

காலை உணவை தவிர்க்கும் 70 சதவீதம் கல்லூரி மாணவிகள்: காந்தி கிராம பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் தகவல்

70 சதவீதம் கல்லூரி மாணவிகள், கல்லூரி செல்லும் அவசரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை என்பதால் அவர்களால் காலை நேர கல்லூரி வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என்ற தகவல் காந்தி கிராம பல்கலைக்கழக அறிவுசார் அறிவியல் துறை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக கல்வி யியல் துறை பேராசிரியர் டாக்டர். ஜாகிதா பேகம், அவரது ஆராய்ச்சி மாணவர் சங்கீத மோயா ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிய கடந்த ஓராண்டாக அறிவு சார் அறிவியல் துறை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் குறித்து பேராசிரியர் டாக்டர் ஜாகிதா பேகம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

80 சதவீதம் மாணவிகள் போக்குவரத்துப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரி செல்லும் காலை நேரத்தில் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் மன நெருக்கடியுடனே வகுப்பறைக்குள் நுழைகின்றனர். அதற்கு அடுத்தப்படியாக 70 சதவீதம் பேர் கல்லூரிக்குப் போகும் அவசரத்தில் காலை உணவு சாப்பிட முடிவதில்லை.

50 சதவீதம் பேர் பெற்றோர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்வதாகவும், 77 சதவீத மாணவிகள் தங்களுக்கு அதிகப் படியான நண்பர்கள் இருப்பதால், அவர்களுடனான தொடர்பை விட முடியாமல், படிப்பில் கவனம் செலுத்த முடிய வில்லை எனவும், 52 சதவீதம் பேர் பாடங்களை மனப்பாடம் செய்வது பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

48 சதவீதம் மாண விகள் ஆங்கில வழிக் கல்வி மிகக் கடினமாக உள்ளதாகவும், 37 சதவீதம் பேர் வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும் முறை புதுமைகள் ஏதும் இல்லாமல் சலிப்பை உண்டாக்குவதாகவும், 43 சதவீதம் பேர் சிறப்பு வகுப்புகளுக்கு வீட்டில் அனுமதி கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், 42 சதவீதம் பேர் குடும்ப வறுமை யால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும், 39 சதவீதம் பேர் மதிப்பெண்கள் குறை வதால் பெற்றோர் தண்டனை கொடுப்பதாகவும், 42 சதவீதம் பேர் தங்களுக்கு கோபம், பயம் அதிக மாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் போக்குவரத்து நெரிசலால் மாண விகள் பல்வேறு பாலியல் தொந்தர வுகளுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகுவதும், சரியான நேரத்தில் கல்லூரிகளுக்கு செல்ல முடிய வில்லை. பஸ் பயணத்தால் மன உளைச்சலோடு வரும் மாணவியர் களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதும் தெரிய வருகிறது. அதனால், மாணவியர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும் போக்கு வரத்து வசதிகளை கல்லூரி நிர்வாகமும், அரசும் மேம்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.

மூளை தனது வேலையை தினமும் சுறுசுறுப்பாகத் தொடங்க சத்துள்ள காலை உணவு எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால், காலையில் கல்லூரி செல்லும் மாணவிகள் 70 சதவீதம் பேர், கல்லூரிக்கு செல்வதில் காட்டும் அவசரத்தால் காலை உணவை சிறிதளவே எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால், அவர்களால் காலை வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் நினை வாற்றல் குறைபாடு ஏற்படுகிறது என அறிவுசார் அறிவியல் துறை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக் கின்றன. டீன் ஏஜில் அதிகப்படியான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனாலும் இப்பருவத்தில் சிறந்த மற்றும் குறைந்த நண்பர் களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்வதும் மதிப்பெண் குறைவதால் தண்டனைகள் கொடுப்பதும் தவறு. பள்ளிகளில் ஆங்கில மொழியை பேச்சுத் திறனுக்கு முக்கியத்துவம் தந்து ஆசிரியர்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் கற்பித்தால் கல்லூரி வரும்போது மாணவர்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்காது.

கல்லூரிகளில் ஆசிரியர்கள் பழமை யான கற்பித்தல் முறையைக் கைவிட்டு, மூளைக்கு உகந்த புதிய கற்றல் கற்பித்தல் முறைகளை (கம்யூனிகேசன் பிராப் ளம் சால்விங், பிரெய்ன் ஸ்ட்ராமிங், டிஸ்கவசி மெக்கட், நவீன தகவல் தொழில்நுட்பம்) பின்பற்றினால் மாணவர்களின் கவனத்தை கற்றலில் ஈடுபடுத்த முடியும் என்றார்.

மூளை தனது வேலையை தினமும் சுறுசுறுப்பாகத் தொடங்க சத்துள்ள காலை உணவு எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால், காலையில் கல்லூரி செல்லும் மாணவிகள் 70 சதவீதம் பேர், கல்லூரிக்கு செல்வதில் காட்டும் அவசரத்தால் காலை உணவை சிறிதளவே எடுத்துக் கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x