Published : 23 Jun 2017 07:59 AM
Last Updated : 23 Jun 2017 07:59 AM

கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி38 இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் இன்று காலை 9.29-க்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங் கியது.

பூமியை துல்லியமாக கண் காணிப்பது மற்றும் தொலை யுணர்வு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கார்ட்டோசாட் செயற் கைக்கோள்களை இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. இது வரை 5 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத் திய இஸ்ரோ, 6-வது செயற்கைக் கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது. இந்த செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் சுமந்து செல்கிறது.

இந்த பிரதான செயற்கைக் கோளுடன் தமிழகத்தின் கன்னியா குமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாண வர்கள் உருவாக்கியுள்ள 15 கிலோ எடையுள்ள சிறிய ரக செயற் கைக்கோள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் உட்பட 14 நாடுகள் உருவாக்கியுள்ள 29 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படு கின்றன.

31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டின் மொத்த எடை 320 டன். கார்ட்டோசாட் 2 செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது. இது, நில அமைப்பை துல்லியமாக கண் காணித்து, தரமான புகைப்படத்தை அனுப்பும் திறன் உடையது. அதைக் கொண்டு நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்களை சிறப் பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

கார்ட்டோசாட் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது சுமார் 520 கி.மீ. தொலைவை 17 நிமிடங்களில் கடந்து, புவி வட்டப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x