Published : 21 Nov 2014 09:19 AM
Last Updated : 21 Nov 2014 09:19 AM

காமராஜர் பற்றி கார்த்தி சிதம்பரம் பேச்சு: சத்தியமூர்த்தி பவனில் சலசலப்பு

சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த இளைஞர் அணி மாநாட்டில் காமராஜர் குறித்து கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று இளைஞர் காங் கிரஸ் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கார்த்தி சிதம்பரம், ‘‘காம ராஜர் ஆட்சி, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று கடந்தகால சாதனைகளை மட்டுமே பேசி மக்களை சந்திக்க முடியாது’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பலரும் கூச்சல் எழுப்பினர்.

அவரைத் தொடர்ந்து பேசிய தேசிய செயலாளர் செல்லக்குமார், ‘‘தமிழகத்தில் காமராஜரின் தியாகத்தை ஒதுக்கிவிட்டு கட்சி நடத்த முடியாது. 2-ம் வகுப்புகூட படிக்க முடியாத நிலையில் இருந்த காமராஜர் காங்கிரஸை வளர்க்க அரும்பாடுபட்டார்’’ என்று கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ‘‘நான் பெருந்தலைவர் காமராஜ ரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தான் பேச ஆரம்பித்தேன். நாம் சரித்திர சாதனைகள், சரித்திர தியாகங்களை மட்டுமே வைத்து மக்களைச் சந்திக்க முடியாது. 47 ஆண்டுகளாக ஒன்றையே திரும்பத் திரும்ப சொன்னால் எப்படி ஆட்சியமைக்க முடியும். எதிர்காலம் குறித்து பேசினால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றேன். இதை தவறாக புரிந்துகொண்ட சிலர் சலசலப்பு செய்தனர். நான் சொல்லவந்ததையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திரு நாவுக்கரசர் உள்ளிட்டோர் எனக்கு சாதகமாகவே பேசினர்” என்றார்.

‘தி இந்து’விடம் செல்லக் குமார் கூறும்போது, ‘‘காமராஜ ரின் 9 ஆண்டுகால ஆட்சியை உலகமே இன்னும் கொண்டாடு கிறது. அவரை ஒதுக்கிவிட்டு யார் எதற்காகப் பேசினாலும் ஏற்கமுடி யாது.

மாணவர் காங்கிரஸ், இளை ஞர் காங்கிரஸ் என்று படிப்படியாக வருபவர்களுக்குதான் காங்கிரஸ் வரலாறு தெரியும். குறுக்கு வழியில் வருபவர்களுக்குத் தெரி யாது. இது ராகுல் காந்தியே சொன்னது. இது இப்பிரச்சினைக் கும் பொருந்தும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x