Last Updated : 22 Dec, 2014 01:14 PM

 

Published : 22 Dec 2014 01:14 PM
Last Updated : 22 Dec 2014 01:14 PM

சென்னையில் ஆசிரியையிடம் கத்தி முனையில் கொள்ளை: ‘வாட்ஸ் அப்’ மூலம் வேகமாக பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு

துரைப்பாக்கத்தில் ஆசிரியை ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் அப்’ மூலம் வேகமாக பரவி வருகிறது.

சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10-வது தெருவில் வசிப்பவர் வேலம் (39). துரைப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி அவரிட மிருந்து 14 சவரன் கொள்ளை யடித்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பான வீடியோ ‘வாட்ஸ் அப்’-பில் வெளியாகி யுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை வேலம் ஸ்கூட்டரில் வருகிறார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் வேலத்தின் ஸ்கூட்டர் மீது 2 இளைஞர்கள் வந்த பைக் மோதுகிறது. ஒருவர் பைக்குடன் சிறிது தூரத்தில் நிற்கிறார்.

மற்றொருவர் நிலை குலைந்து கீழே விழுந்த வேலத்திடம் வந்து பெரிய கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கழற்ற சொல்கிறார். அவர் மறுக்கவே கத்தியை ஓங்குகிறார்.

உடனே பயத்தில் செயின், வளையல், கம்மல் என அனைத் தையும் அழுதுகொண்டே கழற்றி கொள்ளையன் கையில் கொடுக்கிறார் வேலம்.

அவற்றை வாங்கிக்கொண்டு எந்த பதட்டமும் இல்லாமல் அந்த கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தயாராக இருக்கும் கூட்டாளியுடன் தப்பிச் செல்கிறார். பின்னர் ஆசிரியை வேலம், கீழே கிடக்கும் தனது ஸ்கூட்டரை தூக்கி தள்ளிக் கொண்டே செல்கிறார். அவருக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் வேகமாக ஓடிவந்து வேலத்திடம் இருந்து ஸ்கூட்டரை வாங்குகிறான். இந்த வீடியோ 2 நிமிடம் 41 வினாடிகள் ஓடுகிறது.

இந்த சம்பவத்தை ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ பதிவை துரைப் பாக்கம் போலீஸிலும் அவர் ஒப்படைத்திருக்கிறார். வேலமும் புகார் கொடுக்க தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது அந்த கொள் ளையன் பல இடங்களில் கொள்ளையடித்து கைதேர்ந்த வனாக இருப்பதுபோல தெரி கிறது. பட்டப் பகலில் துணிகரமாக நடந்த இந்த சம்பவம் தனியாக செல்லும் பலரை பயமுறுத்தி யுள்ளது.

இந்த வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’-பில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொள்ளையனை விரைந்து பிடித்து பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை சென்னை போலீஸாருக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x