Published : 26 Apr 2017 08:56 AM
Last Updated : 26 Apr 2017 08:56 AM

ஓபிஎஸ் அணி நிபந்தனை நிராகரிப்பு: சசிகலா படங்களை அகற்ற முடியாது- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் படங்களை உடனே அகற்ற வேண்டும் என்ற ஓபிஎஸ் அணியின் நிபந்த னையை எடப்பாடி அணி நிராகரித் துள்ளது. சசிகலா படங்களை அகற்ற முடியாது என அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவால் ஏற்பட்ட துக்கம், கட்சித் தொண்டர்கள் மனதை விட்டும், தமிழக மக்களின் இத யத்தை விட்டும் இன்னும் அகல வில்லை. ஜெயலலிதாவின் மர்ம மர ணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்ம யுத்தத்தின் குரலாகும்.

கட்சித் தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதா மீது குறையாத பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அந்த தர்ம யுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதிமுக தலைமை அலு வலகத்தில் இருந்து சசிகலா படங்களை உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் மதுசூதனன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அணியின் இந்த நிபந்தனை குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த வனத்துறை அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘சசிகலா படம் அகற்றப்பட மாட்டாது. இது போன்ற நிபந்தனையை ஏற்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x