Published : 27 Jun 2016 08:21 AM
Last Updated : 27 Jun 2016 08:21 AM

ஓசூர் தலைமைக் காவலர் கொலை வழக்கு: கூடா நட்பால் வாழ்க்கையை இழந்ததாக கொள்ளையன் வாக்குமூலம்

ஓசூர் தலைமைக் காவலர் கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவர் விக்னேஷ், தவறான நட்பால் வாழ்க்கையை இழந்தேன் என்று போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஓசூர் பாரதிதாசன் நகரில் கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை குற்றப்பிரிவு போலீஸார் பிடிக்க சென்றபோது, கொள்ளையர்கள் கத்தி யால் குத்தியதில் தலைமைக் காவலர் முனுசாமி உயிரிழந்தார். உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப் பட்ட பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, காவல்துறையினர் விசாரணையின்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந் நிலையில் இவ்வழக்கில் தேன் கனிக்கோட்டை யாரப் தெருவைச் சேர்ந்த முஜாமில், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த அமர், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீஸார் தேடி வந்தனர். அதில் அமர் கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நங்கிலி என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய் யப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய விக்கி (எ) விக் னேஷ், முஜாமில் ஆகியோர் நேற்று முன்தினம் ஓசூர் நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் முன்னி லையில் சரண் அடைந்தனர். விக் னேஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறிய தாவது:

நான் பெங்களூருவில் கல்லூரி ஒன்றில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். தவறான நண்பர்களு டன் பழக்கம் ஏற்பட்டதால் இன்று என் வாழ்க்கையை இழந்து தவிக்கிறேன். சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற நோக் கில் நாங்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தோம். நானும் முஜாமில், அமர், மூர்த்தி ஆகிய 4 பேரும் வழிப்பறி கொள் ளையில் ஈடுபட்டு வந்தோம்.

கடந்த 15-ம் தேதி உத்தனப்பள்ளி அருகே ஆசிரியையிடம் நகை பறித்த பிறகு ஓசூர் வந்தோம். எங்களைப் பிடிக்க வந்த தலை மைக் காவலர் முனுசாமியை கத்தியால் குத்திக் கொன்றோம். மேலும் எஸ்ஐ நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினோம். எங்களை போலீஸார் விடாமல் துரத்தி வந்ததால் சரணடைந்தோம்’ என்று கூறியுள்ளார்.

அவரை கைது செய்த போலீஸார், கொள்ளை சம்பவத் தின்போது அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் ‘டெத் நோட்’ என்ற பெயரில் எழுதப்பட்ட 2 பக்க கடிதம், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து விக்கியை போலீஸார், ஓசூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலி கடிதம் மூலம் திசை திருப்ப முயற்சி

கிருஷ்ணகிரி எஸ்பி (பொறுப்பு) கங்காதர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தலைமைக் காவலர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். முஜாமில் விஷம் குடித்ததுபோல் நடித்து வழக்கை திசை திருப்ப முயன்று, போலியாக கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தனக்கு வயது 18 போல் சித்தரித்துள்ளார். ஆனால் முஜாமிலுக்கு 21 வயதாகிறது. பல்வேறு நீதிமன்றங்களில் சரணடையும் திட்டம் தோல்வியடைந்ததால், விக்னேஷ், முஜாமில் ஆகியோர் தீவிரவாதிகளின் வழியை பின்பற்றி செல்போனில் வீடியோ பதிவு செய்து, மெமரி கார்டை தனது நண்பர் பிரவீண் என்பவரிடம் கொடுத்து, தாங்கள் சொல்லும்போது, வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் வெளியிடுமாறு கூறியுள்ளனர். இது சரணடைந்த விக்னேஷிடம் விசாரணை நடத்தியபோது தெரியவந்தது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x