Published : 01 Oct 2014 09:53 AM
Last Updated : 01 Oct 2014 09:53 AM

ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேர் நீக்கம்: முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர் யார்?

ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 35.39 லட்சம் பேர் பயனடைகின்றனர். இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4,201 கோடி செலவிடுகிறது. அதிமுக 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் வழங்கி வந்த உதவித்தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிகளுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக மாதம் ரூ.500 வரை வழங்குகிறது. இதனால் செலவை சமாளிக்க முடியாமல் நிதித்துறை தத்தளிக்கிறது.

இதையடுத்து வீடுவீடாக விசா ரணை நடத்தி, தகுதியற்றோரை நீக்கும்படி வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணியில் தகுதியற்றவர் களாக ஒரு லட்சம் பேர் நீக்கப் பட்டனர். இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த ஆகஸ்ட் 28-ல் பிறப்பித்த உத்தரவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் களின் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள். இவர்கள் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்க பரிசீலிக்கலாம் எனத் தெரி வித்திருந்தார். இந்த உத்தரவை உடனே திரும்பப் பெறும்படி நிதித்துறை முதன்மைச் செயலர் செப். 11-ல் உத்தரவிட்டுள்ளார். அதில், உதவித்தொகை பெறும் முதியோர் பெயர் வறுமைக்கோட் டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் சொத்தும், வருமானமும், 20 வயதுக்கு மேற்பட்ட மகனும் இருக்கக் கூடாது. இவர்கள்தான் உதவித்தொகை பெறலாம். தமிழக அரசால் மட்டுமே இந்த நிதிச் சுமையை ஏற்க முடியாது. தற்போது ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறையில் வைத்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் பட்டியல் முறையாக பராமரிக்கப்படாதவை. இந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என்ற தங்களின் சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தகுதியான முதியோர் குறித்து உயர் அதிகாரிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தகுதியற்றவர்களை நீக்கவும், புதிதாக சேர்க்கவும் எந்த அதிகாரியின் உத்தரவை பின்பற்றுவது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். இதனால் புதிதாக யாருக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிடுவதில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x