Published : 29 Jan 2015 08:21 AM
Last Updated : 29 Jan 2015 08:21 AM

ஐ.ஏ.எஸ். அதிகாரி மதப் பிரசங்கம் செய்ய கூடாது என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை: என்னை யாரும் தடுக்க முடியாது- உமா சங்கர் காட்டமான பேட்டி

ஐ.ஏ.எஸ்.அதிகாரி மதப் பிரசங்கம் செய்யக் கூடாது என்று எந்த சட்டத்திலும் சொல் லப்படவில்லை என்று கிறிஸ்தவ மத ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டதால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியாற்றி வருபவர் சி.உமாசங்கர். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 முதல் 26-ம் தேதி வரை உமா சங்கர் கன்னி யாகுமரியில் பல்வேறு ஜெபக் கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி யான உமா சங்கர் மத பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், இதை மீறினால் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செய லாளர் கே.ஞானதேசிகன் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் "தி இந்து"விடம் கூறியதாவது:

ஐஏஎஸ் அதிகாரியாக 25 ஆண்டு காலமாக பணி புரிந்து வருகிறேன். மதுரை யில் சுடுகாட்டு ஊழலை வெளிச் சத்துக்கு கொண்டுவந்ததற் காகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது விஜிலென்ஸ் அறிக்கை கேட்டதற்காகவும் பணியிட மாற்றம் செய்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ‘எல்காட்’ நிர்வாக இயக்குநராக பணி யாற்றியபோது அரசுக்கு சொந்தமான ரூ.4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை மீட்க முயன்றேன். உடனடியாக பணிமாற்றம் செய்தனர்.

அப்போது, கடும் மன உளைச்சலுக்கு ஆளா னேன். நேர்மையாக செயல் பட்டதற்காக இப்படி செய் கிறார்களே, பேசாமல் செத்துப் போய்விடலாமா? என்றுகூட நினைத்தேன். அந்த நேரத்தில் பைபிள் வசனம் மூலம் ஏசு கிறிஸ்து என்னிடம் பேசினார். அப்போதுதான் ஏசுவைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.

அடிப்படையில், எனது தந்தை சடையாண்டி ஓர் இந்து, தாய் சுகந்தி சாராபாய் ஒரு கிறிஸ்தவர். இதனால், இந்து, கிறிஸ்தவம் இரண்டும் கலந்தவனாக இருந்து வந்துள்ளேன். ஆனால், 2008ல் நிகழ்ந்த சம்பவம் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது.

இந்தியாவில் எந்த குடிமகனும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற, பரப்ப அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. அந்த உத்தரவாதம் எப்படி ஒரு இந்திய குடிமகனுக்கு உண்டோ அதே உத்தரவாதம் ஐஏஎஸ் அதிகாரியான எனக்கும் உண்டு. ஐஏஎஸ் அதிகாரி மத பிரசங்கத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும், அகில இந்திய பணி விதி முறைகளிலும் சொல்லப்பட வில்லை.

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடு கின்றனர். அலுவலக வளாகங்க ளில் இந்துக் கோயில்கள் இருக்கிறதே? நான் ஏசு கிறிஸ் துவைப் பற்றி மக்களிடம் போய் சொல்லுவேன். இது எனது அடிப்படை உரிமை. இவ்வாறு செய்யக்கூடாது என் பதற்கு எந்த சட்டமும் இல்லை. ஏசு கிறிஸ்துவைப் பற்றி நான் பேசுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு உமா சங்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x