Published : 31 Mar 2015 10:05 AM
Last Updated : 31 Mar 2015 10:05 AM

ஏப்.10-ல் மீண்டும் பஸ் ஊழியர் பேச்சு

சென்னையில் நேற்று நடந்த போக்குவரத்து தொழிலாளர் களின் 4-ம்கட்ட பேச்சுவார்த்தை யில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. 5-ம்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 10-ம் தேதி நடக்கவுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் அமைப்பது மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்க அரசு அதிகாரிகள் குழுவினர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை 3 கட்டமாக நடந்தது.

4-ம்கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நேற்று பிற்பகல் நடந்தது. 42 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. 5-ம்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 10-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களி டம் சிஐடியூ பொதுச் செயலாளர் சவுந்திரராஜன், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு பற்றி இந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமாக பேசப்பட்டது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும் என்பதை உறுதியாக கூறியுள்ளோம்.

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளதுபோல, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற னர். அதை நாங்கள் ஏற்கவில்லை. போக்குவரத்து தொழிலாளர் களின் பணி, இத்துறை மூலம் கிடைக்கும் வருவாய், டீசல் சேமிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளோம். இதுபற்றி அரசுடன் ஆலோசித்துவிட்டு தெரிவிப்பதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x