Published : 22 May 2015 08:28 AM
Last Updated : 22 May 2015 08:28 AM

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு: விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய கோர முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்படி கேட்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

தஞ்சாவூர் அம்மன்பேட் டையைச் சேர்ந்த முத்தழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு: எனது மகள் காவ்யா, கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்றார். தமிழ் பாடத்தில் 87 மதிப்பெண் பெற்றிருந்தார். தமிழ் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றி ருந்ததால் மறுகூட்டலுக்கு விண் ணப்பித்தேன். ஆனால், அதன் பிறகும் மதிப்பெண் உயரவில்லை.

இதனால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ் தேர்வு விடைத்தாள் நகலை பெற்றேன். அதில் 7 கேள்விகளுக்கு குறைவாக மதிப்பெண் வழங்கி யிருப்பது தெரிய வந்தது. அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்கியிருந்தால் எனது மகள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பார். அரசின் சலுகை கிடைத்திருக்கும். எனவே, எனது மகளின் தமிழ் தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மறுமதிப்பீடு நடைமுறை இல்லை. மறுகூட்டல் மட்டுமே உள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தில், அவருக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை, மறு கூட்டலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மனுதாரரின் மகளின் தமிழ் தேர்வு விடைத்தாளை பார்க்கும்போது அனைத்து விடைகளும் முறையாகத் திருத்தப்பட்டு அதற்குரிய மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் குறைவாக மதிப்பெண் வழங்கப்பட்ட விடைகளுக்கு, முழுமையான மதிப்பெண் வழங்க வேண்டும் என யாரும் கோர முடியாது. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்வு முறையில் மறுமதிப்பீடு நடைமுறை இல்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.

இந்த மனுவை ஏற்றால், இதே கோரிக்கைகளுக்காக ஏராளமானோர் நீதிமன்றத்தை நாடுவர். இதனால் பொதுத்தேர்வு நடத்துவதன் நோக்கம் பாதிக்கப்படும். எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x