Published : 16 Apr 2014 10:37 AM
Last Updated : 16 Apr 2014 10:37 AM

எளிதில் யாரும் பிரதமராகிவிட முடியாது: எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் பேட்டி

நடிகவேள் எம்.ஆர்.ராதா-வின் பேரன் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம். இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு கிடைத்திருக்கும் கன்னிப் பிரச்சாரகர். இவருக்காக, முன்பு தான் பயன்படுத்திய பிரச்சார வேனை ஸ்பெஷலாக கொடுத்திருக்கிறார் கருணாநிதி. ராமநாதபுரத்தில் முகாமிட்டிருந்த வாசு விக்ரம் ‘தி இந்து-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறீர்கள் களம் எப்படி இருக்கிறது?

பிரச்சாரத்துல கண்ணியமா பேசணும்னு தலைமை எங்க ளுக்கு கட்டளையிட்டிருக்கு. ஆனா, அதிமுக நடிகர்கள், தலைவர் குடும்பத்தை தரக்குறைவா விமர் சிக்கிறாங்க. மக்கள் அவங்க பேச் சைக் கேட்டு முகம் சுளிக்கிறாங்க. மக்களுக்கு ஜெயலலிதா மீது கடுமையான கோபம் இருக்கு. கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் பாதியில நிறுத்திட்டாங்க. இவங்க கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் அறிவிப் போட நிக்குது. பவர் கட் நேரம் கூடிக்கிட்டே போகுது. மின்சாரக் கட்டணத்தையும் ஏத்திட்டாங்க.

நீங்கள் என்னதான் சொன்னாலும் திமுக ஊழல் கட்சி என்ற விமர்சனத் துக்கு பதில் சொல்ல முடியலியே?

ஜெயலலிதா மீதும்தான் ஊழல் வழக்கு இருக்கு. அதுல உண்மை இருக்கு, எப்படியும் தண்டிச்சிரு வாங்கன்னு பயந்துதான் அந் தம்மா 14 வருஷமா வாய்தா வாங்கிட்டு இருக்காங்க. சின்னப் புள்ளைங்க பஞ்சு மிட்டாய் கேட்டு அடம்பிடிக்கிற மாதிரி, ‘ஜட்ஜை மாத்து… வக்கீலை மாத்துன்னு அடம்பிடிக்கிறாங்க. ஆனா, எங்க அண்ணன் ஆ.ராசா, தன் மீது போடப்பட்ட ஊழல் வழக்கை தைரியமா எதிர்கொள்கிறார். இது வரை ஒரு வாய்தாகூட வாங்கலியே. ஏன்னா… எங்களுக்கு மடியில் கணம் இல்லை.

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அதிமுக-வினரும் சொல்றாங்க. தனிக் கட்சி நடத்துற உங்க மாமா சரத்குமாரும் அடித்துக் கூறுகிறாரே?

பிரதமர் ஆவது விளையாட்டுக் காரியமில்லை. டெல்லியில இருக் கிறவங்க 28 (மாநிலங்கள்) ஜெயலலிதாவை பார்த்தவங்க. இவங்க நினைக்கிற மாதிரி சும்மா ’கேக் வாக்'கில் (cake walk) யாரும் பிரதமராகிட முடியாது. சரத்குமார் அப்படி ஏதாச்சும் சொன்னாத்தான் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு ரெண்டு சீட்டாச்சும் அந்தம்மா குடுக்கும். இல்லாட்டா கம்யூனிஸ்டுகளை தூக்கி வீசுன மாதிரி தூக்கி வீசிடும்ல.

கம்யூனிஸ்ட்களை திமுக கூட் டணிக்கு வரும்படி கருணாநிதி அழைத்தும் அவர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்களே?

கம்யூனிஸ்டுகளை ஜெயலலிதா தான் ஒதுக்கித் தள்ளினார். ஆனால், அவர்கள் அழையாத வீட்டில் நுழையாத சம்பந்தியா திரும்பத் திரும்ப அங்க போனாங்க. சமயம் பார்த்து அந்தம்மா வேலைய காட் டிட்டாங்க. அப்பவும் பெருந் தன்மையோடு கம்யூனிஸ்ட்களை திமுக கூட்டணிக்கு அழைத்தார் கலைஞர். ஆனால், அவர்கள் வரவில்லை. இதனால் நஷ்டம் எங்களுக்கு அல்ல; அவர்களுக் குத்தான்.

மு.க.அழகிரி செய்யும் குழப்பங்கள் இந்தத் தேர்தலில் திமுக-வை பாதிக்கும் போலிருக்கிறதே?

இது குடும்பப் பிரச்சினை. தலைவர் குடும்பம் வேறு எங்கள் குடும்பம் வேறு இல்லை. அதனால எங்க குடும்பப் பிரச்சினையை நான் வெளியில் விவாதிக்க விரும்பல. ஆனா, கூடிய சீக்கிரம் எல்லாமே சரியாகிடும்னு மட்டும் என்னால சொல்லமுடியும்.

தேர்தல் பிரச்சாரத்துல விஜயகாந்த் சும்மா வெளுத்து வாங்குறாரே?

அட, ஏன்ணே சும்மா காமெடி பண்றீங்க? உளுந்தூர்பேட்டையில போயி நின்னுக்கிட்டு, ’இது எந்த ஊரு?’ன்னு மக்கள பாத்துக் கேக்குறாரு. ரொம்ப இடங்கள்ல பேசமுடியாம கொட்டாவி விட்டுட்டு போயிருக்காரு. அது ஏன்னு உங்களுக்குத் தெரியும். பிரேமலதா அண்ணி சூப்பரா பிரச்சாரம் பண்ணி ஓட்டுச் சேகரிக்கிறாங்க. அதையெல்லாம் விஜயகாந்த் அண்ணன் கெடுத்துக்கிட்டு இருக்காரு. சத்தியமா இதுதான் உண்மை. பொது இடத்துல எப்படிப் பேசணும்னு இன்னும் அவருக்கு தெரியல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x