Published : 27 Sep 2016 12:46 PM
Last Updated : 27 Sep 2016 12:46 PM

உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள்: பதியத்தக்க 18 அம்சங்கள்

மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சி களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

சென்னை மேயர் சைதை துரைசாமி உட்பட 8 மேயர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது.

அறிவிப்பின் சில முக்கிய அம்சங்கள்:

1. சென்னை (200), வேலூர் (60), சேலம் (60), ஈரோடு (60), திருப்பூர் (60), கோவை (100), திருச்சி (65), தஞ்சை (51), மதுரை (100), திண்டுக்கல் (48), நெல்லை(55), தூத்துக்குடி (60) என 12 மாநகராட்சிகளில் 919 வார்டுகளுக்கும் 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

2. தற்போதைய மேயர்களில் திருச்சி ஜெயா, சேலம் சவுண்டப்பன், தஞ்சை சாவித்திரி கோபால் ஆகியோருக்கு வார்டு உறுப்பினர் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. சென்னை சைதை துரைசாமி, திண்டுக்கல் மருதராஜ், தூத்துக்குடி அந்தோனி கிரேஸ், நெல்லை புவனேஸ்வரி, ஈரோடு மல்லிகா பரமசிவம், திருப்பூர் விசாலாட்சி, கோவை ராஜ்குமார், வேலூர் கார்த்தியாயினி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மதுரை மேயராக இருந்த ராஜன் செல்லப்பா தற்போது சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.

4. சென்னை மேயர் பதவிக்கு நா.பாலகங்கா, ஜே.சி.டி.பிரபாகர், துணைமேயர் பதவிக்கு கே.பி.கந்தன் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படு கிறது.

5. வேலூரில் 60-வது வார்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.அமலநிருபாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

6. சேலத்தில் தற்போதைய மேயர் சவுண்டப்பனுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

7. சமீபத்தில் தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சேலம் உமாராஜுக்கு 40-வது வார்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரும் மேயர் பதவிக்கான பட்டியலில் உள்ளார்.

8. ஈரோட்டில் தற்போதைய துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டல தலைவர் மா.கேசவ மூர்த்தி ஆகியோர் மேயர் பதவி போட்டியில் உள்ளனர்.

9. திருப்பூரில் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவரே மேயராவார் என கட்சியினர் தெரி விக்கின்றனர்.

10. கோவை யில் சீனியரான தாமரைச் செல்வியைவிட, தொகுதி அமைச்சரின் ஆதரவாளர் என அறியப்படும் எஸ்.ஷர்மிளாவுக்கு மேயராகும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

11. திருச்சியில் மேயர் ஜெயா மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில், தமாகாவில் இருந்து வந்த முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தமிழரசி ஆகியோர் பெயர்களும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது.

12. தஞ்சை யில் தற்போதைய மேயர் சாவித்திரி கோபால், ஏ.ஜி.தங்கப்பன், அறிவுடை நம்பி ஆகி யோரும் மதுரையில், கே.சண்முகவல்லி, கண்ணகி பாஸ்கரன், திண்டுக்கல்லில் தற்போதைய மேயர் மருதராஜின் மகள் எம்.பொன்முத்து ஆகியோர் மேயர் பதவி போட்டியில் உள்ளனர்.

13. நெல்லையில் அதிமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான விஜிலா சத்தியானந்தின் சகோதரி வெண்ணிலா ஜீவபாரதி 27-வது வார்டில் போட்டியிடுகிறார்.

14. சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம்: >| சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: சைதை துரைசாமி உட்பட 141 பேருக்கு வாய்ப்பு மறுப்பு |

15. சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினிடம் தோல்வி அடைந்த சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சி மேயரானது போல ஜே.சி.டி.பிரபாகரனுக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். > | சென்னை மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சென்டிமென்ட் கை கொடுக்குமா?- ஜே.சி.டி.பிரபாகரனுக்கு வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் நம்பிக்கை |

16. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மேயர் களுக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. முழு விவரம் அறிய: >| திருச்சி, தஞ்சாவூர், சேலம் மேயர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு |

17. ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்து இருந்தும் இம்முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முழு விவரம்: > | தந்தையால் பறிபோனதா ஈரோடு மேயர் வாய்ப்பு? |

18. திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டில் முன்னாள் வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் மேயர் பதவிக்கு முன்னிலைப்படுத்துவார் எனத் தெரிகிறது. முழு விவரம்: >| அமைச்சராக இருந்தவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டி |

இவரே அடுத்த மேயர் என்பது நெல்லை அதிமுகவினரின் கணிப்பாக உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி, ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு என்.சின்னதுரை மேயராகலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x