Published : 24 Apr 2014 08:05 AM
Last Updated : 24 Apr 2014 08:05 AM

இன்று விடுமுறை எடுக்கக்கூடாது: வாக்களிக்க அனுமதியுண்டு: மின் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு வாரியம் உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று தடையில்லா மின்சாரம் வழங்க, யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என்று மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் விநியோக மையங்களின் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்திலுள்ள 39 தொகுதி களுக்கும் புதுவையிலுள்ள ஒரு தொகுதிக்கும் இன்று (வியாழக் கிழமை) ஒரே கட்டமாக மக்கள வைத் தேர்தல் நடக்கிறது. தமிழகத் தில் அவ்வப்போது ஏற்படும் மின் நிலையப் பிரச்சினைகளால் மின்சார விநியோகம் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நாளில் வாக்குப் பதிவுக்கு பிரச்சினையின்றி தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தேர்தல் ஆணையத்தி லிருந்து மின் வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இதையொட்டி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய வற்றின் பொறியாளர்களுடன் மின் வாரிய உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோ சனை நடத்தினர். இதன்படி, மின் வாரிய பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் உள்ளிட்ட மின் துறை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், வாக்குப்பதிவு நாளில் மின் துறை ஊழியர்கள் எவரும் விடுப்பு எடுக்கக் கூடாது. அதற்குப் பதில் மாற்று விடுப்பு அறிவிக்கப் படும். வாக்களிக்கச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பணியில் இருக்க வேண்டும். ’ஷிப்ட்’ முறை யில் இருப்போரும் அவசரமாக அழைத்தால் உடனே பணிக்கு வரும் நிலையில் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

மின்தடை நீக்கும் மையம், மின் விநியோக மையம், துணை மின் நிலையங்கள் ஆகியற்றில் தொழில்நுட்ப உபகரணங்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் அடிக்கடி ரோந்து வரவேண்டும். வாக்குப்பதிவு மையம் மற்றும் தேர்தல் அலுவலக அதிகாரிகளி டம் செல்போன் எண்ணை அளிப் பதுடன், அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். வாக்கு மையங் களில் ஏதாவது மின் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்லும் வகையில் வாகனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மின் நிலையங்களில் நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றாலை மின் உற்பத்தியை முறையாக மின் தொகுப்புக்கு கொண்டுவரும் பணியில் துணை மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட வேண்டும். டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி போன்றவற்றி லிருந்து மின் விநியோகம் தடைபடா மல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மின் வாரிய உத்தரவுப்படி, அனைத்து பொறியாளர்களும் தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவுகளை அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x