Published : 26 Apr 2017 07:47 AM
Last Updated : 26 Apr 2017 07:47 AM

இன்று அறிவுசார் சொத்துரிமை தினம்: புவிசார் குறியீடில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் - விண்ணப்ப பட்டியலில் சீரக சம்பா, ஜிகர்தண்டா

அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா, ஆத்தங்குடி டைல்ஸ் உள்ளிட்ட 40 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி விண் ணப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை அறிவுசார் சொத்து ரிமை அட்டர்னி சங்கம் தெரிவித் துள்ளது.

அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். அறிவுசார் சொத்துரிமை இயக் கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அந்த வகையில், ‘புதுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறியதாவது:

அறிவுசார் சொத்துரிமை தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறோம். கடந்த 2015-16-ல் மட்டும் இந்தி யாவில் 3 லட்சத்து 41 ஆயி ரத்து 86 புதிய காப்புரிமைகள், முத்திரைகள், புதிய வடிவமைப்பு கள், புவிசார் குறியீடுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே 6,326 புதிய கண்டு பிடிப்புகள், 7,094 புதிய வடி வமைப்புகள், 65,045 புதிய வணிக அடையாளங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி செல்ல தேவையில்லை

அறிவுசார் சொத்துரிமை அலு வலகங்கள் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதா பாத்தில் உள்ளன. காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பதிப் புரிமையை பதிவு செய்வதற்காக இனி டெல்லிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதுதவிர, சைபர் கிரைம் மேல் முறையீட்டு வாரியம், போட்டி சட்ட தீர்ப்பாயம் ஆகியவையும் அறிவுசார் சொத்துரிமை அலுவல கத்துடன் இணக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் சமீபத்தில் அறிவித் திருப்பது பொதுமக் களுக்கான வரப்பிரசாதம்.

26 பொருட்களுக்கு அங்கீகாரம்

புவிசார் குறியீடு பதிவகம் மூலம் தமிழகத்துக்கு திண்டுக்கல் பூட்டு, வில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் மாம்பழம், ஓசூர் ரோஸ், கோவில்பட்டி கடலைமிட்டாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, ராஜபாளையம் பூட்டு, நாகர் கோவில் தேர், தஞ்சாவூர் மரக் குதிரை, சென்னை கட்டம்போட்ட சட்டை, ஊட்டி வறுக்கி, மானா மதுரை கடம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் விரைவில் கிடைக்க உள்ளது.

23 பொருட்களுக்கு விண்ணப்பம்

தவிர புதிதாக நாகப்பட்டினம் பிரம்பு, வேதாரண்யம் உப்பு, நீலகிரி தைலம், ஆத்தங்குடி டைல்ஸ், நெல்லை புல்லாங்குழல், வடக்கம்பட்டி வெடி, சின்னாளப் பட்டி சேலை, மாயவரம் பித்தளை காபி ஃபில்டர், கும்பகோணம் கொட்டைப் பாக்கு, விளாத்திகுளம் மரக்கரி, தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா உள்ளிட்ட 23 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலே தற்போது 2-வது இடத்தில் உள்ள தமிழகம் முதலிடத் துக்கு முன்னேறும். அந்த அள வுக்கு தமிழகத்தில் பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் பொதிந்து கிடக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x